Header Ads

  • Breaking News

    🌹🌹🌹துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் சொல்வதின் அவசியம்🌹🌹        



    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு                


     🌹🌹🌹துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் சொல்வதின் அவசியம்🌹🌹  


         وعن فضالةابن عبيد قال بينما رسول الله صلى الله عليه سلم قاعد إذ دخل رجل فصلى فقال اللهم اغفرلي وارحمني فقال رسول صلى الله عليه وسلم عجلت ايها المصلي إذا صليت فقعدت فاحمد الله بما هو اهله وصلي علي ثم ادعه قال ثم صلى رجل اخر بعد ذالك فحمد الله وصلى على النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم أيها المصلى ادع تجب رواه الترمذي وروى ابوداؤد والنسائي المشكوة86.            



         நபி பெருமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் பள்ளிக்குல் வந்து தொழுதார். தொழுது முடிந்தவுடன் இறைவா என் பாவத்தை மன்னிப்பாயாக. மேலும் எனக்கு கிருபை செய்வாயாக என்றார். அப்போது நபியவர்கள் தொழுபவரே அவசரப்பட்டுவிட்டீர். தொழுது முடிந்து (துஆவிற்காக) அமர்ந்துவிட்டால் அல்லாஹ்வை அவனது தகுதியான வார்த்தைகளால் புகழ்வாயாக. இன்னும் என் மீது ஸலவாத் சொல்லி அவனின் மீது பிரார்த்திப்பீராக என்று கூறினார்கள். இந்நிகழ்வு நடந்த சிறிது நேரத்தில் வேறொரு மனிதர் வந்து தொழுதார். அதன் பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொன்னார். அப்போது நபியவர்கள் அவரைப் பார்த்து தொழுதவரே  நீர் பிரார்த்திப்பீரானால் உமது துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.  


      (திர்மிதி, மிஷ்காத் 86).                       


      __ பகிர்வு மௌலவி k. இப்ராஹீம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரி.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad