ஒரு சிறிய கவிதை
இதயமே...! எம் பெருமானை நேசி!
அவர்களைப் பற்றியே ...எப்போதும் யோசி...!
அண்ணலை நேசிக்காத நெஞ்சம் துடிப்பதை விட வெடிப் பதே மேல்!!
அண்ணலின் நேசம் நிரம்பாத ஈமான் கஹஃபா இல்லாத மக்கா போன்றது..?
ஆயத்துகள் இல்லாத குர் ஆன் போன்றது !!
ஸஜ்தா இல்லாத தொழுகை போன்றது!!
இரசூலை. நேசிக்காமல்...இறைவனுக்கு மட்டும் ஸஜ்தா செய்து கொண்டிருந் தால்.. போதும்..என நினைக்காதே...!
சற்று யோசித்தால்...நீ... யாருக்கு ஸஜ்தா செய்து கொண்டிருக்கிறாய்...என்பது புரியும்..
ஆமீன்.. சொல்வதால்..மட்டும் நீ...மூமின்..ஆக முடியுமா?
நீ...உன்னை...மனைவி..தாய்... எனும் பெண்ணை...குழந்தை... தந்தை...எனும்..கண்ணை....
அனைத்தையும். ..விட...
அவர்களை.. நேசித்தால்...தான்..."மூமின்""
எனும்.."ஹக் மார்க் " முத்திரை கிடைக்கும்
தஸ்பீஹ் சொல்வதில மட்டும். இன்பம் காணுகிறாயே...
இறைவன்.. சலவாத் கூறிக் கொண்டிருப்பதை...
மறந்து போனா யா..?
இறைவனின் சந்நிதான திற்கு..நீ..மட்டும்...நாயக மில்லாமல்..
சென்று விடலாம்..எனும்..தலைக்கணமா..?
சிலருக்கு மக்கா.. சென்று விட்டு..மதினா செல்லாமல்...திரும்பி வர யோசனை!
வரலாற்றில்...மதீனாவில்...அபு அய்யூப் அன்ஸாரி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் வீட்டையும் மஸ்ஜிதுன் நபவியின். இடத்தையும்...
ஓர் ஓட்டகை தானாக...கண்டு.. நிண்றதே...?
உனக்கு...ஓர் ஒட்டகத்தின் உணர்வும்...இல்லையோ...?
மூமின் களே..!
நீங்கள் மக்காவில் " அடிமையாக. நிற்கிறீர்கள்!
மதீனாவில்..நாயக காதலர் களாக. " பதவி உயர்வு பெறுகிறீர்கள்!
இறைவன் நாயகத்தை...காதலிக்கும்...அடிமைகளையே...
விரும்புகிறான்!
No comments