கண்ணாடி பிம்பம்
மனநல மைய்யத்திற்க்கு சென்றேன்.
அங்கே ஒரு இளைஞனை சந்தித்தேன்.
முகம் வெளுத்த அந்த இளைஞனிடம் நீ ஏன் இங்கே வந்தாய்? என்றேன்.
அவன் என்னை ஆச்சரியமாக பார்த்துவிட்டு" கொஞ்சம்கூட நாகரீகமில்லாமல் நீ இப்படி கேட்பது சரியில்லை. இருந்தாலும் சொல்கிறேன்" என தொடர்ந்தான்.
நான் அவனருகில் அர்ந்தேன்.
அவன் பேசத்தொடங்கினான்ன்
என் தந்தை அவரைப்போலவே என்னை உருவாக்க முயன்றார்.
என் தாயோ என் தாயின் தந்தையைப்போல் என்னை உருவாக்க முயன்றார்.
என் மாமாவோ யார் யாரையோ உதாரணம் காட்டி அவர்களைப்போல உருவாக்க முயன்றார்.
என் தங்கையோ அவளின் கணவரின் பெருமை பேசி அவரைப்போல் உருவாக்க முயன்றாள்.
என் தம்பி விளையாட்டு வீரன் அவனைப்போல விளையாடினால்தான் பெரிய ஆளாக முடியும் என்று அறிவுரை கூறினான்.
எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம்,கவிதை,இசை,கணக்கு என்று எனக்கு பாடம் சொல்லித்தந்தவர்கள் அனைவர்களுமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சிஷ்யனாக, வெறும் கண்ணாடி பிம்பமாகத்தான் என்னை உருவாக்க முயன்றார்கள்.
இவர்கள் எல்லோராலும் துரத்தப்பட்டு கடைசியில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.
வெளிஉலகைவிட இந்த இடம் அமைதியானதாக, தெளிவானதாகத் தெரிகிறது என்று சொல்லி முடித்தான்.
ஒருவழியாக நான் இப்பொழுது யாரைப்போலவும் இல்லாமல் நானாகவே இருக்கிறேன்.
இதைச்சொன்னவன் திடீரென்று என்பக்கம் திரும்பி "நீ எப்படி இங்கே வந்தாய்? எனக்கேட்டான்.
நீயும் எனைப்போலத்தானா? என்றான்.
நான் அவசரமாக மறுத்து இல்லை இல்லை நான் வெறும் பார்வையாளனாகத்தான் வந்திருக்கிறேன் என்றேன்.
அவன் முகத்தில் மெல்லிய புன்னகை
"ஓஹோ அப்படியானால் சுவற்றிக்கு அந்தப்பக்கமிருக்கும் பைத்தியக்கார உலகைச்சேர்ந்தவனா நீ"
என்றான்......
-கலீல் ஜிப்ரான்
No comments