நபிகள் நாயகத்தை புகழ்வோம்
ரபிஉல் அவ்வல் மாதத்தில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து (கவிதை)பாடி மகிழும் நாம் அதற்கான ஆதாரங்களையும் அறிந்து கொள்வோம்.....
(01) ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறரால் இயற்றப்பட்ட கவிதைகளை பாடச் சொல்லி அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள்....
(02) ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறரால் இயற்றப்பட்ட கவிதைகளை பாடி மகிழ்ந்தார்கள்......
(03) ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (மஸ்ஜிதுன் நபவியில்) கவிதை பாடச்சொல்லி அவருக்காக துஆவும் செய்தார்கள்...
(04) ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சஹாபாக்கள் புகழ்ந்து கவிதை பாடினார்கள்......
(05) ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தவர்களை நினைவுகூர்ந்து புகழ் பாடுவதை அனுமதித்தார்கள்.....
(06) ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தவரை நினைவு கூர்ந்து (புகழ்ந்து) தர்மங்களும் செய்தார்கள்....
(01) ஷரித் பின் சுவைத் அஸ்ஸகஃபீ(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா? "என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)" என்றேன். "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.
முஸ்லீம் 4540
(02) பராஉ இப்னு ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவித்தார்.அகழ்ப் போரின்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களின் வயிற்றின் தோலை என்னை விட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண்சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகை(ப்பாடல்) வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை கேட்டேன்.
புகாரி 4106,
முஸ்லீம் 3688,
(03) ஸயீத் இப்னு முஸய்யப் ரஹ்மதுல்லஹ் அறிவித்தார்.மஸ்ஜிதுந் நபவீயில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு கவிபாடிக் கொண்டிருக்க, உமர் ரலியல்லாஹு அன்ஹு அங்கு வந்தார்கள். ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹ
ு பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு, 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு பக்கம்திரும்பி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,'(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல்குதுஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்) "என்று பதிலளித்தார்கள்.
புகாரி 3212
முஸ்லீம் 4897
(04) ஹைஸம் இப்னு அபீ சினான் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அறிவித்தார். அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் பேச்சுக் கிடையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களப் பற்றிக் குடிப்பிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தவறான வற்றைக் கூறுபவர் அல்லர்.
ரஸுல் ஸல்ள்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பராட்டி பின் வருமாறு) அவர் பாடினார் என்றார்கள்
:எங்களிடையே இறைத்தூதர் இருக்கிறார்கள்.
வைகறை பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்;
குருட்டுத்தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காண்பித்தார்கள்.
அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும் போது இவர்கள் படுக்கையிலுருந்து எழுந்து தொழுவார்கள்.
புகாரி 6151, 1155
(05) ருபய்யிஉ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார். எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் - ரஹ் -அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்" (என்று ருபய்யிஉகூறினார்கள்) அங்கு சில(முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்" என்று கூறினாள். உடனே ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்)சொல்" என்று கூறினார்கள்.
புகாரி 4001,
(06) ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்.கதீஜா(ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) அவரைப்பார்த்ததில்லை. ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி)வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பால துண்டுகளாகப் பிரித்து,பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட)அனுப்பி விடுவார்கள். சிலவேளைகளில் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ" என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர்(புத்திசாலியாக) இருந்தார்;(சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படி யெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர்வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது" என்று பதில்கூறினார்கள்.
புகாரி 3818, 6004முஸ்லீம் 4820
No comments