புனித பராஅத் இரவு சிறப்பு துஆ
சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாசிமிய் நாயகம் அவர்கள்
அருளிய துஆ (by His Holiness Jamaliya Syed Khaleel Awn Moulana El Hasaniyul Hashimiy, )
யாஅல்லாஹ்! உன் பொருட்டாலும்இந்த பராஅத்தின் பொருட்டாலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டாலும்,அவர்களுக்கு முன் வந்த நபிமார்கள் பொருட்டாலும், ரஸூல்மார்கள் பொருட்டாலும், பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கலீபாக்களான அபூபக்கர் ஸித்தீக் (ரலி), உமர் (ரலி),உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் பொருட்டாலும், பதுறு ஸஹாபாக்கள் பொருட்டாலும், ஏனையஸஹாபாக்கள் பொருட்டாலும், பாத்திமா நாயகி (ரலி) அவர்கள் பொருட்டாலும், ஹஸன் (ரலி) அவர்கள்பொருட்டாலும், ஹுஸைன் (ரலி) அவர்கள் பொருட்டாலும், குதுபு நாயகம் அப்துல் காதிர் ஜீலானி(ரலி) அவர்கள் பொருட்டாலும், அவர்களுக்கு முன் வந்த - பின் வந்த குதுபுமார்கள், வலீமார்கள் பொருட்டாலும், ஷாஹுல்ஹமீது நாயகம் (ரலி) அவர்கள் பொருட்டாலும்,
யா அல்லாஹ்! நல்ல சந்தோசமான வாழ்வையும்,நோயற்ற பூரண சுகத்தையும், கொடிய நோய்கள்நம்மை அணுகாமலும், ஆபத்து எம்மை அணுகாமலும், உடலிலே நல்ல சக்தியையும், எம் ஐம்புலன்களும்சிறப்புடன் செயற்படும் தன்மையையும் தந்தருள்வாயாக.
அல்லாஹ்வே! நம் அனைவருக்கும் நீடிய ஆயுளைக் கொடுப்பாயாக! கொடியநோய்வாய்ப்பட்டுக் கஷ்டப்படுவோருக்குப் பூரண சுகத்தைக் கொடுத்தருள்வாயாக! பரக்கத்தையும்செழிப்பையும் துன்பமற்ற வாழ்வையும் துயரற்ற வாழ்வையும் கவலையற்ற வாழ்வையும் அல்லாஹ்நீ தந்தருள்வாயாக!
நின்றிருக்கும் வியாபாரம் கடல்மடைபோல திறக்கப்பட்டு எங்கும் செழிப்பானவியாபாரம் நடந்து நம் பிள்ளைகளின் வாழ்வைச் செழிப்பாக்கி வைப்பாயாக, நம் பிள்ளைகள்செல்வச் செழிப்புடன் வாழ அருள்பாலிப்பாயாக! குடும்பங்கள் கோபம், பொறாமை முதலானவைகள் நீங்கி ஒற்றுமையுடன்வாழ அருள்பாலிப்பாயாக!
நீதி நியாயம், நேர்மை, உண்மை, மனவலிமை ஆகியவைகளை எமக்குத் தந்துமக்கள் மத்தியிலே எம்மை உயர்ந்தவர்களாக்குவாயாக!
உன் உயர்வு மிக்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைநம் உயிரினும் மிக்கவர்களாக அன்புகொண்டு அவர்களைஉயர்வு படுத்திப் பேசும் சுகமான நாவையும், அவர்களை உயர்த்திப்பாடும் அழகான பாவையும்,அவர்களின் உறுதியையும் உயர்ந்த ஈமானையும் தந்தருள்வாயாக! அவர்களுக்காக தம்மைத் தியாகஞ்செய்யும் உயர்ந்த பண்பையும் உடல் சக்தியையும் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! பெருமானாரை எதிர்த்து, அவர்களை இழிவுபடுத்தி, அந்நியர்பணத்தில் வாழும் இஸ்லாத்திலுள்ள இஸ்லாத்தின் எதிரிகளைப் பிடுங்குவாயாக! இஸ்லாத்தின்பரிசுத்தத்தை மாசுபடுத்தி அந்நியர் மத்தியில்இழிவுபடுத்தும் இஸ்லாமிய துரோகிகளைச் சித்திரவதைக் குள்ளாக்குவாயாக! கொடிய நோய்களால்பீடிக்கப்பட்டு இழிவுற்று அழிந்து மடியச் செய்வாயாக!
அல்லாஹ்வே! உனக்காக, உன் நபிக்காக, உன் ஊழியர்களுக்காக வாழ்ந்துவரும் உன் தியாகிகளுக்கு பூரண நல்வாழ்வும் நீடிய ஆயுளும் அளவற்ற சந்தோமும் நோயற்ற சுகவாழ்வும் அருள்வாயாக!ஆமீன்யாரப்பல் ஆலமீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில்ஆலமீன்.
No comments