உண்மை அறியாததின் தவறு....
#மஹான்களின்
#மகத்துவம்தெரியாமல்
#குறைசொல்லாதீர்..!
##################
அந்த மாபெரும் மஹான்
லுஹர் ஜமாஅத் முடிந்தவுடன்
வேகமாக வெளியே
சென்றார்கள்...
இதைப் பார்த்து
எப்போதும்
மஹான்களை குறை சொல்லும் ஒருவர்
"இவரெல்லாம்
ஒர் அவ்லியாவா
அப்படி என்ன அவசரம்?"
என திட்டினார்
பின்பு அந்த மஹான்
பின்னாலேயே போனார்...
"அந்த மஹான்
கடைவீதி சென்று
விலை உயர்ந்த ரொட்டி
இனிப்பு வகைகள்
பொறித்த இறைச்சிகள் வாங்கினார்கள்..!"
"இதைப் பார்த்த
அந்த மனிதர்
ஓ...சூஃபியா இருந்து கொண்டு
விதவிதமா
சாப்பாடா..?" என
திட்டினார்
"சாப்பிட ஆரம்பிக்கட்டும்
வாய்க்கு வந்தபடி
திட்டுகிறேன் பார்..!" என புலம்பினார்
"அந்த மஹான்
வாங்கிய உணவுப் பொருட்களை மூட்டையாகக்கட்டி
முதுகில் சுமந்து நடந்தார்கள்..!"
இந்த மனிதரும்
பின்னாலேயே போனார்...
"உணவு மூட்டையை
சுமந்தபடி
லுஹர் முதல் அஸர்வரை
பலமைல் தூரம் நடந்தார்கள்..!"
பின்பு
"ஒரு சின்ன
கிராமம் வந்தது
அதில் ஒரு பள்ளிவாசலில்
ஒரு ஏழை ஒருவர்
படுத்த படுக்கையாக கிடந்தார்...!"
"அவர் தலைமாட்டில்
உட்கார்ந்து
உணவு மூட்டையைப் பிரித்து
அந்த ஏழைக்கு
மஹான் உணவு
ஊட்டிவிட்டார்கள்...!"
"இந்தக் காட்சியைப்
பார்த்த
அந்த மனிதர்
உடல் நடுங்கிப் போய்விட்டார்..!"
"ஓடிப் போய்
மஹானின்
கையைப் பிடித்து
என்னை மன்னித்து விடுங்கள்..! என்று
அழுதார்
"இனி
இந்தப் பாவத்தை
செய்யாதே..!" என
மாபெரும் மஹான்
#பிஷ்ருப்னுஹாரிஸ்
#ரலியல்லாஹூஅன்ஹூ
அவர்கள் கூறினார்கள்
"இனி நான்
மஹான்களை
திட்ட மாட்டேன்
என அல்லாஹ்விடம்
தவ்பா செய்தார்..!"
"பிற்காலத்தில்
அவரும் ஒரு மஹானாகிவிட்டார்..!"
by---abuthahir faizee baqvi.com kumbakonam
No comments