மிஃராஜ் இரவில் ஒரு மகிழ்வுக்கவிதை
🌷மிஃராஜில் ஒரு மகிழ்வுக்கவிதை....🌷
சங்கை பொங்கும் சாந்த இரவின் சந்தோஷ முகிழ்வு இன்று!
மெய்யவனாம் துய்யவனோடு"
முஹம்மதரின் நேர்காணலின் மஹோன்னத மாநாடு !
வானுலகில் மின்னிடும் தாரகைக்கூட்டம்' விழாக்கோலம் பூண்டு உலாவரும்!
தேன் நிலா! பரிமளம் தூவி' வழி பிளந்து வாசனை நாயகரின்" பஞ்சுப்பாதங்களை நெஞ்சகத்தில் ஏந்தி கொஞ்சி மகிழ கெஞ்சி நிற்கும்!
வானோர்கள் புடை சூழ வாகை நபிமாரும், தீஞ்சுவை ஸலவாத்தினை தேனாக தான் ஓதி "
முஹம்மதரின் முகம் நோக்கி' முன்னவனின் எழில் கண்டு,
முத்திரை ஓவியத்தை ஆர்வமுடன் அள்ளியணைத்து ஆவல் தீர கொஞ்சி மகிழ்வர்!
எத்தனை இன்பங்கள் சோபனித்து சூழ்ந்திருந்தும்" ஏந்தலரின் எண்ணமெல்லாம் உம்மத்தோரின் குறை மாற்றி உயர் நிலையைத்
தருவதுதான்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸய்யிதீ யாரஸுல்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாஸய்யிதீ யா ஹபீபல்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யாரஹ்மதுல்லில் ஆலமீன்!
வ யாஷஃபீஅல் முஃத்னிபீன்!
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு
✍🏻_எம், ஆயிஷா சித்தீக்கா ஃபைஜிய்யா......
No comments