இறைவனின் புகழைப் பாடு
குரல், பாடல் வரிகள்
ஆன்மிக இசைத் தென்றல்
மன முருகியே இறைவனின்
புகழை பாடு
கணம் மிகுந்திடும் அவனின்
நினைவை கூறு
மனமே விழைந்து நீ
இறையை நாடு ( மனம்)
அவனின் வாசலில்
உன் விதி மாறும்....
கிருபை பார்வை உனது
பாவம் தீர்க்கும்...
கருணை தயாபரானவன் நீ கேளு
குருவின்றி ஞானங்கள் பெறமுடியாது ....
தீட்சையின்றி உன்
காட்சி கிடையாது
மறுமையில் உன் திரு முகம் தான்
நாம் பார்க்க
மன முருகியே இறைவனின்
புகழை பாடு
கணம் மிகுந்திடும் அவனின்
நினைவை கூறு
மனமே விழைந்து நீ
இறையை நாடு ( மனம்)
No comments