Header Ads

  • Breaking News

    பதட்டமும், பயமும்






    பொதுவாகவே நம் ஒவ்வொருவருக்கும் பதட்டமும், ஞாபக மறதியும் நிரந்திர நோயாக மாறிவிட்டது, இதைதான் நமது வாழ்க்கையின் மூலம் நமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம் என்பது நமக்கே தெரிவது இல்லை.


    இறைவேதம் வழிக்காட்டுகிறது 


    وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏ 

    (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.

    (அல்குர்ஆன் : 2:45)


    சரி இருக்கட்டும் உங்கள் பிள்ளைகள் தேர்விற்காக இரவு பகல் கண்விழித்து படித்து இன்றும் வரக்கூடிய நாள்களில் தேர்வு எழுத செல்லும் அவர்களைப் பாருங்கள் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராது படித்தது மறந்து விடுமோ, அல்லது படித்தது வராமல் வேறு விதமாக கேள்விகள் வருமோ என்ற பதட்டமும் பயமும் அவர்களிடம் தெரியும். 


    ஆனால் நீங்கள் அவர்களுக்கு தைரியம் கொடுங்கள் கவலைப்படாதே நீங்கள் நல்ல படித்து இருக்கிறீர்கள் பயம் வேண்டாம் என்று கூறி 


    11 முறை சலவாத் ஓத சொல்லி அதற்கு பிறகு இந்த ஆயத்தை 11 முறை  ஓத சொல்லுங்கள்


    سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ‏ 

    اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰى‏ 


    (அல் குர்ஆன் 87: 6, 7. )


    ஆயத்தை ஓதி பிறகு 11 முறை சலவாத் ஓத சொல்லுங்கள். பிறகு பள்ளிக்கூடம் செல்ல சொல்லுங்கள்.


    இந்த இறைவசனத்தின் விளக்கமே அல்லாஹ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் கூறுகிறான் நாயகமே நீங்கள், நான் உங்களுக்கு இறக்கிய என்னுடைய வசனத்தை அதை நீங்கள் அவசரமாக மனனம் செய்யவேண்டும் என்றும் உங்களுக்கு மறந்து விடக்கூடாது என்று நீங்கள் அவசரமும் பதட்டமும் படுகிறீர்கள், பதட்டப்படாதீர்கள் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துவோன் என்று கூறினான் இறைவன். புரிகிறதா உங்களுக்கு சரி உங்கள் பிள்ளைகள் தேர்விற்காக சென்றிருக்கிறார்கள் இப்போது நீங்கள் இந்த இறை வசனத்தை அதிகம் அதிகம் ஓதி துஆ வின் மூலம் அவர்களுக்கு படித்ததை மறக்காமல்  நல்ல தேர்வு எழுத உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் மற்றும் நம் சகோதர மத பிள்ளைகளுக்கும் நிச்சயமாக அல்லாஹ் வெற்றியைத் தருவான் அமீன் ஆமீன் ஆமீன்.


             மௌலவி கலீfபா 

      அஹமது மீரான் சாஹிப்

            உஸ்மானி ஆலிம்

    கலீபத்துல் காதிரி வஷத்தாரி

              மேலப்பாளையம்

                திருநெல்வேலி

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad