ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மாநபிகளார் ﷺ அன்னவர்கள் பிறப்பதற்கு 1000 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தபா அவ்வல் ஹாமீரி இவரே அப்போது யமன் நாட்டு அரசர்.
இவர் தனக்கு கீழ் உள்ள இராட்சியத்தை சுற்றிவர ஆசைப்பட்டார்.
தன் படைபட்டாளங்களை ஒன்று திரட்டினார்.
12,000 அறிஞர்களும் அதிகாரிகளும்,
132,000 குதிரை வீரர்கள், 113,000 தரைப்படை வீரர்கள்.
இந்த சுற்றுலாவின்போது இந்தப்படை மக்கமாநகரை வந்தடைந்தது.
இவ்வளவு ஆரவாரமாக வந்த
இந்த அரசரையோ படைகளையோ
யாரும் வரவேற்கவில்லை, வீட்டிலிருந்தும்
யாரும் எட்டிப்பார்க்கவில்லை, மதிப்பு மரியாதை கொடுக்கவில்லை.
இதைக்கண்டு அரசன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.
யாது காரணம் என்று
தன் அதிகாரிகளிடம் விசாரித்தான்.
பிரதம மந்திரி
அதற்கு பதிலளித்தார்.
"இங்கே அல்லாஹ் ஸுப்ஹானஹு
வதஆலாவின் 'அல்லாஹ்வின் இல்லம்' என்று ஒரு கட்டிடம் இருக்கிறது.
இந்த படையைவிட எத்தனையோ மடங்கு அதிகமான மக்கள்,
முழு உலகிலிருந்தும்
இங்கு வருகைதந்து,
இந்த கட்டிடத்துக்கும்
இங்கு வாழும் மக்களுக்கும் மதிப்பு மரியாதை செய்கிறார்கள்.
அவர்கள் எதற்காக
இந்த அற்பமான படை ஊர்வலத்திற்கு மதிப்பு மரியாதை செய்யவேண்டும்?"
இதை கேட்ட அரசன் கடுங்கோபம் கொண்டான்.
சத்தமிட்டு சபதம் செய்தான், நான் இந்த கட்டிடத்தை உடைத்து தரைமட்டமாக்குவேன்.
இங்கு வாழும்
அத்தனை மக்களையும் கொல்லுவேன்."
சொல்லி அவன்
வாய்மூட முன்னர்
அவனது வாய், மூக்குதவாரங்கள், காதுகளிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது.
அத்தோடு ஒருவகையான துர்நாற்றம் வீசும் திரவமும் வெளியாகியது.
இதனால் ஒருவரும் அவன் பக்கத்திலும் இருக்காமல் எழுந்தோடினர்.
அத்தனை மருத்துவர்களும் அவனை
குணமாக்க அயராது முயற்சி செய்தனர்.
எத்தகைய பலனும் கிட்டவில்லை.
இந்நிலையில் ஒரு மார்க்கப் பெரியார் முன்வந்து கூறினார்,
"அரசே, இது வானுலகிலிருந்து வந்துள்ள நோய்.
இதற்கு மருந்து பூவுலகிலேயே இருக்கிறது. நீங்கள் ஏதாவது தீய எண்ணத்தை
சமீபத்தில் கொண்டிருந்தால், அதற்காக பச்சாதப்பட்டு மன்னிப்பு வேண்டுங்கள், இந்த நோய் குணமாகிவிடும் என்று கூறினார்.
உடனே
அரசன் மனம் வருந்தி மன்னிப்பு கோரினான்.
அவனது வருத்தம் அத்தனையும் நீங்கி பழைய நிலையை அடைந்தான்.
அரசன் தாங்க முடியாத மகிழ்ச்சி அடைந்தான். கஃபாவை விலை உயர்ந்த பட்டுப்புடைவையால் போர்த்தினான்.
மக்கநகர் மக்களுக்கெல்லாம் செல்வத்தை வாரிவாரி வழங்கினான்,
பட்டாடைகளை கொடுத்து மகிழ்ந்தான்.
இப்போது
அவனது படை
மதீனத்துல் முனவ்வராவை நோக்கி முன்னேறி வந்தடைந்தது.
அப்படையிலிருந்த பழம் நூல்களைக் கற்றறிந்த ஞானவான்கள்
அதன் மணலையும் கற்களையும் அப்பிரதேசத்தையும் ஆராய்ந்து,
இப்பிரதேசமே
இறுதி
தூதர் முஹம்மத் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆளும் பிரதேசம் என அறிந்துக்கொண்டார்கள்.
உடனே தங்கள் அரசனின் புறம் திரும்பி கூறினார்கள்,
"அரசே, நாங்கள் இந்த இடத்தைப் பிரிந்து வருவதைவிட இவ்விடத்திலேயே சாகுவோம்.
நாம் பேரருளைப் பெற்றுக்கொண்டோம்.
இறுதி தூதர் முஹம்மத் ﷺ அன்னவர்கள் ஒருநாள் இங்கு வருவார்கள்.
நாம் அவர்களின் நற்றோழர்கள் ஆகுவோம்.
அப்படி இல்லையாயின் மண்ணறைவாசிகளாகி அன்னவர்களின்
காலடிபட்ட தூசிகளால் நிச்சயமாக போர்த்தப்படுவோம். எம்முடைய மீட்சிக்கு இதுவொன்றே போதும்."
இதனால்
அவ்வரசன் அந்நகரில் 400 வீடுகளை கட்டி அந்த ஞானவான்களுக்கு கையளித்தான்.
அந்த ஞானிகளின் தலைவரின் வீட்டுக்கருகில், மேலும்
சில சிறந்த இல்லங்களை நிர்மானித்து வரப்போகும் நபி ﷺ அன்னவர்கள் அவற்றுள் ஒன்றை தெரிவு செய்துக்கொள்ளட்டும்
என்று கூறினான்.
பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான செல்வத்தை அவர்களுக்கு கையளித்தான்.
அந்த ஞானிகள் தலைவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து கூறினான்,
"நீங்கள் உங்கள் வாழ்நாளில் அந்த நபியைக் கண்டால், இந்த மடலை அன்னவர்களுக்குக் கையளியுங்கள்.
அவ்வாறில்லாது போனால் அன்னவர்கள் வரும்வரை இந்த மடல் உங்கள் குடும்பத்திலேயே இருக்கட்டும்."
இந்தக் கடிதம் 1000 வருடங்களாக
அந்த ஞானவானின் குடும்பத்தில் கைமாறிக்கொண்டே வந்தது.
இறுதியாக பிரபல்யமான ஸஹாபி தோழர் ஸையுதுனா அபூ அய்யூப் அன்சாரி رضي الله عنه அவர்களிடம் வந்து சேர்ந்தது.
அவர்கள் தன்னுடைய சேவகர்
அபூ லைலா அவர்களிடம் கொடுத்து அதை பாதுகாப்பாக வைக்கும்படி கூறினார்கள்.
அந்தக் கடிதத்தில் பின்வரும் வாசகங்களே பொறிக்கப்பட்டு இருந்தன:
"படைப்புகளில் மிகவும் பலவீனமானவன்,
தபா அவ்வல் தாமீரி மூலம் பாவிகளுக்காக மன்றாடும், நபிமார்களுக்கெல்லாம் தலைவராகிய முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்களுக்கு, அல்லாஹ்வின் நேசர் ﷺ அன்னவர்களே,
நான் உங்கள் மீதும் உங்களுக்கு வெளியாகும் வேத நூலின் மீதும் நீங்கள் போதனை செய்து பரப்பும் சன்மார்க்கத்தின் மீதும் ஈமான் கொண்டேன்.
நான் என் வாழ்நாளில் உங்களைக் கண்டுக் கொண்டேனானால் அதுவே நான் அடையும் பெரும் பாக்கியம்.
அப்படி கிடைக்காவிட்டால், என்னை கைவிட்டுவிடாதீர்கள். எனக்காகாவும் மன்றாடுங்கள்.
தான் உங்களின் முதல் உம்மத்தவர்களில் ஒருவன். நான் உங்களுக்கு விசுவாசப்பிரமாணம் - بيعت செய்துக்கொள்கிறேன்.
'அல்லாஹ் ஒருவன், நீங்களே அவனின் திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்' என்று உறுதி கூறுகிறேன்.
நூல்:*ஹுஜ்ஜதுல்லாஹி அலா அல்-ஆலமீன்,
*தாரிக் இப்னு அஸ்ஸாகிர்
AWLIYA ALLAH- NUOORUL HUDAH
தமிழில்:-Abdur Raheem Muhammad Jaufer அவர்கள்.
(இன்ஷா அல்லாஹ்
தொடரும்)
No comments