🌹மிஃராஜ் பற்றி சிறு துளிகள் தொடர் 1🌹
🌹🌹🌹 மிஃராஜ் விளக்கம்🌹🌹🌹
புராக் எனக்காகக் கொண்டு வரப்பட்டது. (புராக் என்பது) வெண்மையானதாகவும், கழுதையைவிட பெரியதாக - நீண்டதாகவும், கோவேறு கழுதையைவிட சிறியதாகவும் உள்ள ஒரு விலங்கு ஆகும். அதன் (மறு) ஓரம் முடிவடைகின்ற இடத்தில் அதன் பாதத்தை வைக்கும். அதன்மீது நான் ஏறி பைத்துல் முகத்தஸை அடைந்தேன். நபிமார்கள் தங்கள் வாகனங்களை எந்த வளையத்தில் கட்டுவார்களோ அந்த வளையத்தில் அதை நான் கட்டினேன். அதன் பின்னர் அப்பள்ளியினுள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு வெளியேறினேன். அப்பொழுது ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மதுவை ஒரு பாத்திரத்திலும் பாலை ஒரு பாத்திரத்திலும் என்னிடம் கொண்டு வந்தனர். நான் பாலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இயற்கையைத் தேர்ந்தெடுத்தீர் என்றார்கள்.
பிறகு நம்மை ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வானத்தின்பால் உயர்த்தினர். வானத்தை அடைந்த அவர் (கதவைத்) திறக்குமாறு கூறினர். அப்பொழுது "நீர் யார்" என கேட்கப்பட்டது. "ஜிப்ரயீல்" என்றார். "உம்முடன் இருப்பவர் யார்?" எனக் கேட்கப்பட்டது. "முஹம்மது" எனக் கூறினார். "அவர்களையும் இங்கு அழைத்து வர (அனுமதி) அனுப்பப்பட்டதா?" எனக் கேட்கப்பட்டது. ஆம் என (ஜிப்ரயீல்) கூறினர். எங்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அப்பொழுது நான் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன்.
என்னை (ஆதம் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வரவேற்று எனக்காக நல்ல வற்றுக்காக துஆ இறைஞ்சினார்கள். அதன்பின்னர் எங்களை இரண்டாவது வானத்தின்பால் உயர்த்தினர். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், கதவு திறக்குமாறு வேண்டினர். "நீர் யார்?" எனக் கேட்கப்பட்டது. ஜிப்ரயீல் என்றார். உம்முடன் இருப்பவர் யார்? எனக் கேட்கப்பட்டது. "முஹம்மது" எனக் கூறினர். "அவர்களின்பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா?" எனக் கேட்கப்பட்டது. ஆம் என்றார்.
எங்களுக்காக் (கதவு) திறக்கப்பட்டது. அப்பொழுது நான் எனது சிறிய தாய் வழிமக்களாகிய ஈஸாபின் மர்யம், யஹ்யாபின் ஜக்கரிய்யா அவர்களுடன் இருக்கின்றேன். அவ்விருவரும் என்னை வரவேற்று எனது நன்மைக்காக (துஆ) இறைஞ்சினார்கள்.
பிறகு ஜிப்ரயீல் நம்மை மூன்றாவது வானத்தின்பால் உயர்த்தி கதவு திறக்குமாறு கேட்டார்கள். "நீர் யார்?" எனக் கேட்கப்பட்டது. "ஜிப்ரயீல்" என்றார். "உம்முடன் இருப்பவர் யார்?" எனவும் கேட்கப்பட்டது. "முஹம்மது" எனக் கூறினார். எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அப்பொழுது நான் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். அவர் உலகத்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட அழகில் சரிபாதியைக் கொடுக்கப்பட்டவராக இருந்தார். எனக்கு வரவேற்பு கூறி எனக்காக சிறந்தவர்களுக்காக இறைஞ்சினார்.
அதன்பின்னர் நம்மை நான்காவது வானத்தின்பால் அவர் (ஜிப்ரயீல்) உயர்த்தினார். ஜிப்ரயீல் திறக்குமாறு கூறினர். "யார் அது?" எனக் கேட்கப்பட்டது. "ஜிப்ரயீல்" என்றார். "உம்முடன் இருப்பவர் யார்?" எனவும் கேட்கப்பட்டது. "முஹம்மது" என்று கூறினார் "அவர்களின்பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா?" எனக் கேட்கப்பட்டது. ஆம் என்றார். எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அப்பொழுது இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நான் இருக்கின்றேன். அவர்கள் என்னை வரவேற்று எனக்காக - சிறந்தவர்களுக்காக துஆ இறைஞ்சினர். வல்ல அல்லாஹ் உயர்வான இடத்திற்கு அவரை (இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) உயர்த்திருக்கிறோம் எனக் கூறினான்.
நம்மை ஐந்தாவது வானத்தின்பால் அவர் உயர்த்தினார். ஜிப்ரயீல் திறக்குமாறு கூறினார். "யார் அத்?" எனக் கேட்கப்பட்டது. "ஜிப்ரயீல்" என்றார். "உம்முடன் இருப்பவர் யார்?" எனவும் கேட்கப்பட்டது. "முஹம்மது" என்று கூறினார். "அவர்களின்பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா?" எனக் கேட்கப்பட்டது. ஆம் என்று கூறினார். எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அப்பொழுது நான் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். அவர்கள் என்னை வரவேற்று எனக்காக, சிறந்தவர்களுக்காக இறைஞ்சினார்.
அதன் பிறகு ஆறாவது வானத்தின்பால் நம்மை உயர்த்தினார்கள். ஜிப்ரயீல் திறக்குமாறு கூறினார். "நீ யார்?" எனக் கேட்கப்பட்டது. "ஜிப்ரயீல்" எனக் கூறினார். "உம்முடன் இருப்பவர் யார்?" எனவும் கேட்கப்பட்டது. "முஹம்மது" என்று கூறினார். "அவர்களின்பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா எனக் கேட்கப்பட்டது. ஆம் என்று கூறினார். எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அப்பொழுது நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். எனக்கு வரவேற்பு கூறி நன்மைக்காக இறைஞ்சினார்கள்.
அதன் பின்னர் ஏழாவது வானத்தின்பால் ஜிப்ரயீல் எங்களை உயர்த்தினார். ஜிப்ரயீல் திறக்குமாறு கூறினார். "நீர் யார்?" எனக் கேட்கப்பட்டது. "ஜிப்ரயீல்" எனக் கூறினார். "உம்முடன் இருப்பவர் யார்" எனவும் கேட்கப்பட்டது. "முஹம்மது" என்று கூறினார். அவருக்காக அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா எனக் கேட்கப்பட்டது. ஆம் என்றார். எங்களுக்காகக் (கதவு) திறக்கப்பட்டது. அப்பொழுது நான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். பைத்துல் மஃமூரின்பால் அவர்கள் முதுகைச் சாய்த்தவர்களாக இருக்கிறார்கள். அப்பொழுது அந்த வீட்டினுள் ஒரு நாளைக்கு எழுபதாயிரம் வனவர்கள் நுழைகிறார்கள். அதன்பால் ஒரு தடவை நுழைந்தவர் மீண்டும் நுழைவதில்லை. (அவர்கள் திரும்புவதில்லை). பிறகு.............................
தொடரும்...........
No comments