Header Ads

  • Breaking News

    இந்தியாவில் இஸ்லாம் பரவியது இறைநேசர்களின் இனிய பண்பால்..!




    #இந்தியாவில்

    #இஸ்லாம்பரவியது

    #இறைநேசர்களின்

    #இனியபண்பால்..!

    ♡♡♡♡♡♡♡♡♡♡

    #அஜ்மீர்காஜா

    நாயகத்தை

    ஒரு மனிதன்

    பார்க்க வந்தான்..


    "எஜமான்

    அவனைப் பார்த்ததும்

    புன்னகைத்தார்கள்..!"


    "மிகவும்

    மரியாதையாக

    பணிவாக

    நடந்து கொண்டான்..!"


    "அவனை

    அன்போடு

    அழைத்து...

    பக்கத்தில்

    உட்கார வைத்தார்கள்..!"


    எஜமான் பேச

    ஆரம்பித்தார்கள்..


    "எல்லோரும்

    மனத்தூய்மை

    பெறுவதற்காக

    மஹானைத் தேடி

    வருவார்கள்..."


    "நீ மஹானையே

    கொல்வதற்காக

    அல்லவா 

    வந்திருக்கிறாய்..!"

    என்றதும்

    அதிர்ந்து போய்விட்டான்.


    "என்னை கொல்வதுதான்

    உனக்கு

    சந்தோஷம் என்றால்...

    தாராளமா கொன்று விடு.!"

    என சொன்னதும்


    "கை...கால்

    நடுங்கியவனாக

    மாறுவேடத்தை

    கலைத்தான்..!"


    "மறைத்து வைத்திருந்த

    கத்தியை எஜமான் முன் வைத்து..."


    "என்னை மன்னித்து விடுங்கள்...

    நான் பணத்துக்காக

    உங்களை கொல்ல வந்தேன்..!"

    என்றான்.


    சீடர்கள்

    "உன்னை கொல்ல

    அனுப்பியது யார்.?"

    என கேட்டார்கள்


    "சொல்லாதே...

    பிறர் தவறை

    மார்க்கம்

    மறைக்க சொல்கிறது..!"

    என எஜமான்

    சொன்னதும்


    "கருணை

    உள்ளம் கொண்ட

    காஜா நாயகத்தை

    இவர்களையா

    கொல்ல வந்தோம்.!" 

    என கண்ணீரோடு பார்த்தான்.


    "எஜமான்

    அவன்  ஹிதாயத்திற்காக

    துஆ செய்தார்கள்..!"


    "கல்பு மாறி

    கலிமா சொல்லி

    இஸ்லாமானான்..!"


    "14 வது தடவை

    ஹஜ் செய்யும் போது

    மக்காவில் மவ்தாகி

    ஜன்னத்துல் முஅல்லாவில்

    அடக்கம் செய்யப்பட்டார்..!"

    by..abuthahir

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad