எது சிறந்து...?
#எதுசிறந்தது..?
#மார்க்க கல்வியா?
#இறை நம்பிக்கையா?
☆♡☆♡☆☆♡☆♡
ஒருநாள்
அந்த ஷைக்
தன் சீடரைப் பார்க்க சென்றார்கள்...
"சீடர் மிக மரியாதையாக
வரவேற்றார்..!"
"சாப்பிட
ரொட்டியையும்
உப்பையும்
வைத்தார்..!"
"ஷைக் அவர்கள் ரொட்டியை பிய்த்து
சாப்பிட போகையில்..."
"வாசலில் ஒரு ஏழை
உணவு கேட்டார்..!"
"உடனே சீடர்
ஷைகுக்கு வைத்த
உணவை எடுத்து சென்று
ஏழைக்கு கொடுத்தார்..!"
இதைப் பார்த்த
ஷைக்
"உமக்கு
மார்க்க அறிவு
குறைவு தான்..!"
"விருந்தாளிக்கு
வைத்த உணவை
எடுத்து கொடுக்கலாமா..?"
என்றார்கள்
"சீடர்
அமைதியாக இருந்தார்..."
"சிறிது நேரத்தில்
ஒரு மனிதர்
ரொட்டி,இறைச்சி,
ஹல்வா,500திர்ஹம்
கொண்டு வந்து
என் எஜமான்
கொடுக்கச்
சொன்னார்கள்..!"
என்றார்.
அதை ஷைகு
நாயகத்திற்கு
சாப்பிட வைத்த பின்
சீடர் சொன்னார்
"எஜமானே!
நீங்கள் வந்த நேரம்
வீட்டில் சரியான
உணவு இல்லையே
என கவலைப்பட்டேன்..!"
"உங்களுக்கு
விதவிதமாக உணவு தர
என் மனம் நாடியது..!"
"அதனால்
அந்த உணவை
ஏழைக்கு கொடுத்து...
அதற்கு பகரமாக
அதைவிட
சிறப்பான உணவை
அல்லாஹ் தருவான்
என்ற நம்பிக்கையில்
கொடுத்தேன்..!"
"அல்லாஹ்
என் நம்பிக்கையை
வீணாக்கவில்லை..!"
என மஹான்
#ஹபீப்அஜமீ
#ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள்
சொன்னதும்...
#அஷ்ஷைக்
#ஹஸன்பஸரீ
ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள்
அழகாக சொன்னார்கள்
"மார்க்க அறிவைவிட
இறைநம்பிக்கை
எனும் இறைஞானக்
கல்வி தான்
உயர்ந்தது..!"
என்பதை
அல்லாஹ் உணர்த்தி விட்டான்
என்றார்கள்.
by.அபூதாஹிர்
No comments