Header Ads

  • Breaking News

    புனித மிஃராஜ்



                  புனித மிஃராஜ்

              

                "மிஃராஜ் இரவில் விழித்திருந்து வணக்கம் புரிபவர் ஒரு நூற்றாண்டு காலம் வணக்கம் புரிந்த நன்மைகளை புரிவார்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நவின்றனர்  என இமாம்கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யா உலூமித்தீனில் குறிப்பிடுகிறார்கள். 

      

                அவ்விரவில் இரண்டிரண்டு ரக்அத்துகளாக பன்னிரெண்டு ரக்அத்துகள் தொழுது முடித்து " சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு  வல்லாஹு அக்பர் என்று நூறு தடவையும், அஸ்தஹ்பிருல்லாஹ் ரப்பீ மின்குல்லி தன்பின் வதூபு இலைஹி என்று நூறு தடவையும் ஓதுமாறு இமாம் அவர்கள் கூறுகின்றார்கள். 




                                                            قال الله تعالى 

    سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من ايتنا انه هو السميع البصير


       ( அல்லாஹ்) மிகத் தூய்மையானவன். அவன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னும்) தனது அடியாரை (க் கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகுதொலைவில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். அவ்வாறு அழைத்துச் சென்ற நாம், அதனைச் சூழவுள்ள பூமிகளை ஆசிர்வதித்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக (உமது  இறைவனாகிய) அவனே செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். 

                  ( அத்- 17, வசனம் - 1)


             அல்லாஹ் இவ்வசனத்தில் "பிஅப்திஹீ" தனது அடியாரை என்று கூறியிருப்பதிலிருந்து மிஃராஜ் என்பது ஜிஸ்மானிய்யத் க்டலோடு அமைந்தது என்னும் உண்மை இங்கு தெளிவாக்கப்பட்டுள்ளது. 

             உடலும், உயிரும் இணைந்தால்தான் "அப்து" அடியான் என்றாகும். உடலைவிட்டு உயிர் பிரிந்திடின் அது மய்யித்தாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது உடலுடனேயே மிஃராஜ் சென்றார்கள் என்பதை உச்சொல் அறிவிக்கின்றது. 




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad