ரஜப் என்பதன் விளக்கம்
ரஜப் என்பதன் விளக்கம்
ரஜபில் இருப்பது மூன்றெழுத்து 'ர' அல்லாஹ்வின் (ரஹ்மத்) அருளையும், 'ஜீம்' கொடையையும் 'ப' அவனது (பிர்) தயாளத்தையும் குறிக்கிறது.
'ரஜப்' என்றால் பொழிதல் என்று ஒரு பொருள் உண்டு. அல்லாஹ்வின் ரஹ்மத் இம்மாதத்தில் தொடர்ந்து பொழிகிறது. செவிடு என்ற பொருளும் உண்டு. இம்மாதத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு ஆயுதங்களின் ஒலிகள் கேட்கப்படாமல் இருப்பதால் இப்பெயர் வழங்கப்படலாயிற்று என்றும் கூறுவர்.
அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"நிச்சயமாக சுவர்க்கத்தில் ஓர் ஆறு இருக்கின்றது. அந்த ஆற்றுக்குப் பெயர் 'ரஜப்' எனப்படும். அதிலுள்ள தண்ணீர் பாலைவிட வெண்மையானது. மேலும் தேனைவிட இனிமையானது. ரஜப் மாதத்தில் எவர்கள் நோன்பு நோற்கின்றனரோ அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு நீர் புகட்டுவான்."
(பைஹக்கி. )
ரஜப் மாதத்தின் சிறப்பான நாட்கள்
ரஜப் மாதத்தில் நற்செயல்கள் ஆற்றுவதற்கு அனைத்து நாட்களும் சிறந்தவைகளே! அவற்றுள் சிறப்பான ஐந்து நாட்கள் பின் வருமாறு
1) ரஜப் மாதத்தின் முதல் இரவு
2) ரஜப் மாதத்தின் ஆரம்ப வெள்ளி இரவு.
3) ரஜப் மாதத்தின் ஒவ்வொரு ஜும்ஆவுக்கும் அஸருக்கும் இடைப்பட்ட நேரம்.
4) ரஜப் மாதத்தின் பதினைந்தாம் இரவு.
5) ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் இரவு.
No comments