சிறப்புமிகு ரஜப்
இது இஸ்லாமியப் புத்தாண்டின் ஏழாவது மாதமாகும். அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்த்தஆலா கூறுகின்றான்.
"அல்லாஹவுடைய நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுவீராக!"
(அத் : 14, வசனம் : 5).
அய்யாமுல்லாஹ் அல்லாஹ்வின் நாட்கள் என்பது, ஹழ்ரத் மூஸா (அலை) அவர்களுக்கு முன்னுள்ள சமூகத்தார்களான ஹழ்ரத் நூஹு (அலை), ஹழ்ரத் லூத்து (அலை) முதலிய நபிமார்களது சமூகத்தாருக்கு நிகழ்ந்தவற்றை தமது சமூகத்தாருக்கு நினைவூட்டி அவர்களை தீனின்பால் அழைக்குமாறு இறைவன் ஹழ்ரத் மூஸா (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
அய்யாமுல்லாஹ் அல்லாஹ்வின் நாட்கள் என்பதற்கு அல்லாஹ்த்தஆலாவினுடைய அருட்கொடைகள் இறைவனிடமிருந்து மக்களுக்கு அடைந்துள்ள நற்பேறுகள் எனக் கருத்துரைக்கின்றனர்.
اذا دخل رجب قال اللهم بارك لنا رجب وشعبان وبلغنا رمضان
ரஜப் மாதம் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ இறைஞ்சுவார்கள். "யாஅல்லாஹ்! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் பரக்கத் செய்வாயாக! எங்களை ரமலானை அடையச் செய்வாயாக!"
(பைஹகீ).
ரஜபு மாதநோன்புகள்
ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பதுபற்றி கஃபதுப்ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்காமலே இருக்க மாட்டார்கள் எனக் கூறும் அளவிற்கு (வெறுமனே) இருந்துவிடுவர் என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். என அப்பாஸ் இப்னு ஹனீஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரீ, முஸ்லிம், அபூதாவூத். )
அதாவது ரஜப் மாதத்தில் சில நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து நோன்பிருந்தார்கள். (சில நாட்கள் தொடர்ந்து நோன்பிருக்க வில்லை) .
No comments