ரஜப் மாதம் முதல் ஜும்மாவின் சிறப்பு
ரஜப் மாதம் முதல் ஜும்மாவின் சிறப்பு
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'லைலத்துல் ரகாயிப்' தொழுகையையும் நியமமாகத் தொழுது வந்தார்கள். அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாகிய அப்துல்லாஹ்வின் திருநுதலில் இலங்கிக் கொண்டிருந்த நூரே முஹம்மதிய்யா, ரஜப் முதல் நாள், வெள்ளி இரவு, அன்னை ஆமினா அவர்களின் கருப்பையில் போய் தரித்தது. இது கி.பி. 570ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாள், வியாழன் பின்னேரம், வெள்ளி இரவில் நிகழ்ந்தது.
ஒவ்வோராண்டும், ரஜப் முதல் நாள் வெள்ளிக்கிழமை வராததால், ஒவ்வோராண்டும் ரஜப் முதல் வெள்ளிக்கிழமையை "லைலத்துல் ரகாயிப்" எனப் பெயரிட்டு, அவ் இரவில் விசேடப் பிரார்த்தனை செய்வது ஹிஜ்ரி 3ஆம் நூற்றாண்டில் பைத்துல் முகத்தஸில் தொடங்கப்பட்டது. சூபியாக்கள் இதனை, வணக்கத்திற்குரிய சிறந்த இரவாக் கருதுகிறார்கள். எனவே சூபியாக்களின் தலைவராகிய கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும், அன்று சிறந்த வணக்கம் நிகழ்த்தியதில் வியப்பில்லை.
நூல் - கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை வரலாறு.
No comments