ஞானமழை
முஹம்மதரை போற்ற முகில்கள் வந்து சூழும்
முஹம்மதென்றாலே ஞானமழை ஊற்றும்
முஹம்மதர் பொருட்டால் மஹ்ஷரில் நிழல் பூக்கும்
முஹம்மதிலே அழிந்தால் ஹக்கின்வெளி ஏற்கும்
நாம் காதல் கொள்ளத்தான் உதித்தார் காமில் முஹம்மது
இறைக்காதலாலேதான் உதித்தார் தாசிம் முஹம்மது
இறை உவப்பில் உதிப்பில் உதித்தவர்தான் நூரு முஹம்மது
மறைவேதம் பெற்ற பேறுதான் அபுல் காசிம் முஹம்மது
ரூஹுல் குத்ஸின் இரகசியமாம் பீரு முஹம்மது
ஈமானின் ஆதிக் காரணம் ஏகாந்த முஹம்மது
குன்னெனும் நாதம் பிறக்க காரணம் முஹம்மது
மனிதப் போர்வை போர்த்தவர் முசம்மில் முஹம்மது
கருத்தில் நிறைந்த காரணரே காவல் முஹம்மது
கருதாத பேர்க்கும் மோட்சம் நல்கும் காதல் முஹம்மது
கலப்பில்லாத காதலின் கருதானே முஹம்மது
கல்பில் இருந்தால் கப்ரிலும் வருவாரே முஹம்மது
வல்லோனின் வள்ளல் தன்மை தந்த தானம் முஹம்மது
எல்லை இல்லாத கருணையின் வடிவான முஹம்மது
ஹக்கின் சூரத்தானவரே சாந்த முஹம்மது
ஏகயிறை உள்ளமையின் சாரம் முஹம்மது
விளையாத பாலை நெஞ்சிலே பாலாறு முஹம்மது
நெருப்பாறு சூழும் வேளையில் நிழலாகும் முஹம்மது
மதினாவில் வீற்று மனங்களெல்லாம் ஆளும் முஹம்மது
மதி நாவில் நித்தம் ஊறட்டும் சலவாத்து முஹம்மது
முஹம்மதரை போற்ற முகில்கள் வந்து சூழும்
முஹம்மதென்றாலே ஞானமழை ஊற்றும்
முஹம்மதர் பொருட்டால் மஹ்ஷரில் நிழல் பூக்கும்
முஹம்மதிலே அழிந்தால் ஹக்கின்வெளி ஏற்கும்
Mashook Rahman
No comments