ஷஃபானுல் முஅள்ளம்
இஸ்லாமியப் புத்தாண்டின் எட்டாவது மாதமாகும்.
قال الله تعالى....
حم والكتاب المبين انا أنزلناه في ليلة مباركة أنا كنا منذرين
فيها يفرق كل أمر حكيم.
ஹாமீம் தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் இதனை பாக்கியம் பெற்ற ஓர் இரவில் இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்களாக இருக்கின்றோம். அதில் (அவ்விரவில்) நுட்பமான ஒவ்வொரு காரியமும் தீர்வு செய்யப்படுகிறது.
(அத் = 44 வசனம் = 1-3)
ஷஃபான் என்னும் சொல் "முன்ஷப்" என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். முன்ஷப் என்றால் பங்கிடுதல் எனப் பொருள்படும். இம்மாதத்தில் தான் அல்லாஹ் தனது அடியார்களுக்குறிய ரிஜ்க் என்னும் வாழ்க்கை வசதிகளை செல்வத்தை, உணவுகள் முதலியவற்றை பங்கிட்டுக் கொடுக்கிறான்.
ஷஃபான் என்னும் இம்மாதத்திற்குப் பிரிந்துச் சென்றிடும் மாதம் என்னுமோர் பெயரும் உண்டு. ஒருமுறை அரபகத்தை இறைவனின் சோதனை சூழ்ந்திட்டபோது வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. இதன் காரணத்தால் தண்ணீர் தேடி தம்குடும்பத்தார்களைப் பிரிந்து சென்றதும் இம்மாதத்திலேயே தான்.
இம்மாதம் பதினைந்தாம் இரவு சங்கைமிகுந்த "பராஅத்" இரவு ஆதலால் இம்மாதத்திற்கு அல்முஅள்ளம் என்னும் பெயரும் உண்டு.
ரமளான் என் உம்மத்தினர்களுடைய மாதம், ஆனால் ஷஃபானோ என்னுடைய மாதம் வானவர், மனிதர், ஜின் ஆகியவற்றைவிட எனக்குள்ள மேன்மைப்போன்று இம்மாதம் மற்றைய மாதங்களைவிட மேன்மை பெற்றுள்ளது என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இம்மாதத்தில் அவர்கள் அதிகமதிகமாக இறைவனை வணங்கவும், நோன்பு நோற்கவும் செய்தனர். எனவே இதற்கு ஷஹருன்னபி என்னும் பெயரும் ஏற்பட்டது. ரமலான் வரவைப் பற்றி நன்மாரயம் கூறும் மாதம். அறம் (சத) வழங்கல், பாவ மன்னிப்புக் கோருதல், திருக்குர்ஆனை ஓதுதல் ஆகியவற்றின் மாதமாகும். இம்மாதத்தில் தான் நரகவாசிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இம்மாதம் 23ஆம் நாள் ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிறந்தார்கள்.
ஷபே பராஅத்தின் சிறப்பு
பராஅத் என்னும் சொல் புரூஉ என்னும் அடிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். புரூஉ என்பதற்கு விடுதலை பெறுதல் என்பது பொருளாகும். காரணம் அந்நல்லிரவில்தான் நரகவாசிகளின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுதலை பெறுகின்றனர்.
ஃபார்சீ மொழியில் ஷப் என்னும் சொல்லுக்கு இரவு என்று பெயர். இவ்விரவிற்கு நான்கு வகையான சிறப்புப் பெயர்கள் வழங்கப்படுகின்றது.
1) லைலத்துல் முபாரக்கா
2) லைலத்துல் ரிஜ்க்
3) லைலத்துல் ரஹ்மா
4) லைலத்துல் பராஅத்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
No comments