அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா
அன்னை கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முதல் மனைவி ஆவார்கள். இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்புக்குரியவர்களாக திகழ்ந்தார்கள்.
முத்து மாளிகை ஒன்று (சொர்க்கத்தில்) கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்ற நற்செய்தியை அவர்களுக்கு சொல்லும்படி அல்லாஹ், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குக் கட்டளையிட்டான்.
அன்னை கதீஜா வபாத்தான பின் ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொன்னார்கள்,
“இறைவன் மீது ஆணையாக! எனக்கு கதீஜாவைத் தவிர வேறு நல்ல துணைவி கிடைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக மக்கள் என்னை மறுத்தபொழுது என்னைக்கொண்டு ஈமான் கொண்டார்கள். மக்கள் என்னை பொய்யன் என்றபோது, என்னை வாய்மையாளன் என உண்மைப்படுத்தி வைத்தார்கள். மக்கள் எனக்குப் பொருளாதாரத் தடை விதித்தபோது தனது திரண்ட செல்வத்தை வாரிவழங்கி என்னை ஊக்குவித்தார்கள். அன்னார் மூலமாகவே குழந்தைச் செல்வங்களை வல்ல நாயன் எனக்கருள்பாலித்தான்!“
நூல்: ஸுர்கானி, பாகம் - 03, பக்கம் - 24
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெற்ற பின்னர் முதன்முதலில் ஈமான் கொண்டவர்கள் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்தான்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்.
.
கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் அன்னவரைப் பார்த்ததில்லை.
.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.
.
அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள்.
.
ஸஹீஹுல் புகாரி – 3818
.
No comments