அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் பெண்களிலேயே பெரும் மார்க்க மேதையாக விளங்கினார்கள். இஸ்லாமிய தத்துவ சாஸ்திரம், இரகசிய ஞானம், சரித்திரம், வைத்தியம் சம்பந்தமான அனேக பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். கல்வியிலும் பாண்டித்தியம் பெற்றவர். அனேக கவிகள் கவியரங்கேற்ற இவர்களிடம் வருவார்கள். அரசியல் ஞானமும், நிறையப் பெற்றவர்கள்.
பெரும் நபித்தோழர்கள் கூட தங்களுக்கு எழும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார்கள்.
கலீபாக்களான ஹழ்ரத் அபூபக்கர், ஹழ்ரத் உமர், ஹழ்ரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் காலங்களில் மார்க்கத் தீர்ப்பெனும் ‘பத்வா’ அளித்துக் கொண்டிருந்தார்கள். ஸுப்ஹானல்லாஹ்!
!
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவை வெறுப்போரின் நிலை
================================
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் : "ஒரு மனிதர் உங்களை, நீங்கள் அவரது தாய் இல்லை என்று கூறுகிறார் எனக் கூறப்பட்டது , அப்பொழுது
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்: அவர் உண்மை தான் கூறியுள்ளார்! ஏனெனில் நான் முஃமின்களின் தாய், முனாஃபிகீன்களின் ( நயவஞ்சகர்களது ) தாய் அல்ல" என்று விடையளித்தார்கள்.
நூல்: அஷ்ஷரீஅது லில் ஆஜுரீ 5/3394
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்.
.
கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் அன்னவரைப் பார்த்ததில்லை.
.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.
.
அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள்.
.
ஸஹீஹுல் புகாரி – 3818
.
No comments