Header Ads

  • Breaking News

    மாநபி ﷺ அவர்கள் மீது மவ்லிது ஓதுவோம்


    ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ


    🌺 *மாநபி ﷺ அவர்கள் மீது மவ்லிது ஓதுவோம்* 🌺


    🌺 *மவ்லிது என்றால் என்ன?*


             *மவ்லிது* என்ற சொல்லுக்கு அரபுமொழியில் *பிறப்பு* என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில் புகழ்வதற்கு மவ்லித் என்று கூறப்படும்.


    🌺 *மவ்லிதிற்கு ஆதாரம் :*


          உலகிலுள்ள கோடானகோடி முஸ்லிம்கள் ஓதி வருகின்ற மவ்லிதிற்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் சான்றுகளாக உள்ளன.


    🌹 *குர்ஆன்*🌹


           இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைப் பற்றிய விவரங்கள், அவர்களின் மகத்துவங்கள் மற்றும் மாண்புகள் மவ்லிதில் கூறப்பட்டுள்ளன. இவற்றின் சான்றாக குர்ஆன் அமைந்துள்ளது.


          ஏனென்றால், பல்வேறு இறைத்தூதர்களின் பிறப்பு பற்றி குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக:


    *மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு*

    (அல்குர்ஆன் 28:7)


    *யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு*

    (அல்குர்ஆன் 19:7,15)


    *ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு*

    (அல்குர்ஆன் 19:19,33)


    *முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு* (அல்குர்ஆன் 3: 81, 61:6)


            நாயகக் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனில் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து

    பேசுகிறான்.

    உதாரணமாக,


    *وإنك لعلي خلق عظيم*


          *(நபியே) திண்ணமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள்.* அர்குர்ஆன் 68:4


    *ورفعنا لك ذكرك*


       *(நபியே) உங்கள் மகிமையை நாம் உயர்த்தியுள்ளோம்.*

    (அல்குர்ஆன் 94:4)


    *وما أرسلناك إلا رحمة للعالمين*


        *(நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம்*. (அல்குர்ஆன் 21: 107)


     🌹 *ஹதீஸ்* ஆதாரங்கள் 🌹


    🌺 *அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு*

    அவர்கள் ஓதிய மவ்லித் :


    *وفينا رسول الله يتلو كتبه إذا انشق معروف من الفجر ساطع أرانا الهدي بعد العمي فقلوبنا به موقنات أن ما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا استقلت بالمشركين المضاجع*

    رواه البخاري


    1) எங்களிடைய அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள் வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறை வேதத்தை ஓதுகிறார்கள்.

    2) குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயமாக நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.

    3) இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.


    அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

    நூல் புகாரி எண் : *1155 (1087)*


    🌺 *சஹாபா பெருமக்கள் ஓதிய மவ்லித்*


    *نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا*

    رواه البخاري


        நாங்கள் உயிர்வாழும் காலமெல்லாம் புனிதப் போர் செய்வோமென முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

    அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் நாங்கள்.


    அறிவிப்பாளர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு)

    நூல் புகாரி எண் : *7201 (6661)*


    🌺 *ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரழியல்லாஹு அன்ஹு)* அவர்கள் ஓதிய மவ்லித் :


    *هجوت محمدا فأجبت عنه وعند الله في ذاك الجزاء هجوت محمدا برا حنيفا رسول الله شيمته الوفاء وقال الله قد أرسلت عبدا يقول الحق ليس به خفاء*

    رواه المسلم


    1. இறைமறுப்பாளர்ளே! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி கவி

    பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலியை இறைவனிடமுண்டு.


    2) நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுப்படுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும். 


    3) அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான். சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத் தூதராக அனுப்பியுள்ளேன். அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.


    அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)

    நூல் : முஸ்லிம் எண்: *4545*


    🌺 *கஃப் இப்னு ஜுஹைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்* ஓதிய மவ்லித்


    *أنتست أن رسول الله أو عدني والعفو عند رسول الله مأمول فقد أتيت رسول الله معتذرا والعذر عند رسول الله مقبول إن الرسول لنور يستضاء به وصارم من سيوف الله مسلول*

    رواه الحاكم. 


    1) இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.


    2) மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.


    3) திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும் இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.


    அறிவிப்பாளர்: *ஆஸிம் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)*


    நூல் : ஹாகிம் எண் *6558*


    ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad