Header Ads

  • Breaking News

    புலனுணர்வில் திளைப்பவன்

    🌸 *புலனுணர்வில் திளைப்பவனையும், ஆத்மஞானங் கண்டவரையும் பற்றி பரீதுத்தீன் அத்தார் சொல்லியுள்ளதன் விளக்கம்* 🌸


             ஆத்மஞானங் கண்டவர் (ஞானி) யாவருங் காணும்படி விஷங் குடித்தால்கூட அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் உண்டாகாது. ஏனெனில், அவர் (ஆத்மீக) ஆரோக்கியம் அடையப்பெற்றவராவார்; நிதானம் எனும் தலையைவிட்டு விடுபட்டவராவார். ஆனால், இறைவனைத் தேடும் அப்பாவி முரீதோ (நாட்டக்காரனோ) ஜூர நிலையிலிருப்பவனாவான்.


          நபிபெருமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்: *"ஹே (உணவு முதலியன) படியளக்கப்பட வேண்டும் என்று நாடுவோனே, எச்சரிக்கை! நீ நாடப்படுபவன் எவனுடனும் திருப்தியடைந்து விடாதே!"* என்று.


          உன்னுள் நம்ரூது ஒருவன் இருக்கிறான்; எனவே நெருப்பினுள் போகாதே! நீ அதை அணுக விரும்பினால் முதலில் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) ஆக ஆகிக்கொள்!


               *உனக்கு நீந்தத் தெரியாத, கடலில் பழக்கமற்ற நிலையில், வீண் முரண்டுக்காகக் கடலில் குதித்து வையாதே!*


           *அவர் (மெய்ஞானி) நெருப்பிலிருந்து சிவந்த ரோஜாக்களை வெளிக்கொணர்வார்; நஷ்டத்திலிருந்து. அவர் லாபத்தை மேல் தளத்துக்குக் கொண்டுவருவார்,*


            *சம்பூரண மனிதர் (ஞானி) மண்ணைக் கையில் அள்ளினாலும் அது பொன்னாகிவிடுகிறது; அரைகுறையானவன் தங்கத்தை எடுத்தாலும் அது சாம்பலாகிவிடுகிறது.*

              நேர்மையாளன் இறைவனால் ஏற்கப்பட்டவனாதலால், சகல விஷயங்களிலும் அவன் கரம் இறைவனின் கரமாய் உள்ளது. அரைகுறையானவனின் கரம் ஷைத்தானின் கரமாகும், ஏனெனில், அவன் நயவஞ்சகம் என்ற கண்ணியில் அகப்பட்டுக் கொண்டுள்ளான்.


            (சம்பூரண மனிதனான) இவர்களிடம் அறியாமை வந்தால் அதுவுமே அறிவாகிவிடுகிறது; நிராகரிப்பவனிடம் செல்லும் அறிவும் அறியாமையாகிவிடுகிறது.


            தீயவன் எடுக்கும் எதுவும் தீயதாக ஆகிவிடுகிறது. (ஆனால்,) சம்பூரண மனிதன் விஸ்வாசமற்ற தன்மையை ஏற்றாலும் அதுவும்

    சன்மார்க்கமாகவே ஆகிவிடுகிறது.


             *கால்நடையாக நடந்து போய்க்கொண்டு, குதிரைமீது சவாரி செய்யும் ஒருவரோடு (சம்பூரண ஞானியோடு) சண்டையிடும் நீயா உன் தலையைக் காத்துக்கொள்ளப் போகிறாய்! இப்போதே நீ திருந்திக்கொள்!*


    🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

    நூல் : *மஸ்னவி ஷரீஃப்*


    பக்கம் : *169,170*


    பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

    🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad