Header Ads

  • Breaking News

    மிஃராஜ் பற்றி சிறு துளிகள் தொடர் - 3



          

                         மிஃராஜ் விளக்கம் 

               

         நபிமார்கள் பற்றி  ஸல்லல்லாஹு            அலைஹி வஸல்லம் அவர்கள்                                        கூறியவை



             மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பள்ளத்தாக்கிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தோம். "இது என்ன பள்ளத்தாக்கு?" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நீலநிற (அஜ்ரக்) பள்ளத்தாக்கு என நாங்கள் கூறினோம்".  அப்பொழுது மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின்  நிறம், அவர்களின் முடியைப்பற்றி கூறினார்கள் (தாவூத் என்ற ஹதீஸ் அறிவிப்பவர் அதனை மனனம் செய்யவில்லை) அல்லாஹ்வின்பால் " தல்பிய்யா" கூறுவதனால் உயர்ந்த ஓசையுடையவராகவும், அவரது காதில் இருவிரல்களை வைத்தவராகவும், இந்தப் பள்ளத்தாக்கில் நடப்பவராக மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை நிச்சயமாக நான் உற்று நோக்குபவனை போன்று இருக்கிறேன்." எனக் கூறினார்கள். 

                 அதன்பின்னர் ஒரு கீழ் பகுதிக்கு வந்தோம். இது என்தக்கீழ்ப்பகுதி என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க," ஹர்ஷா (மதீனாவிற்கும், ஷாம் நாட்டுக்கும் இடையிலுள்ள) மலைப்பகுதி" என்றோம் அல்லது லஃப்து என்றோம். 

          

            யூனுஸ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாகக் கம்பளி ஜிப்பா அவர்கள் மீ(தணிந்)திருக்க அவர்களின் ஒட்டகக் கயிறு ஈச்சம்பாளை நார் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தது. அது தொய்வாக விடப்பட்ட நிலையில் இந்தப் பள்ளத்தாக்கில் "தல்பிய்யா" கூறியவர்களாக நடந்து கொண்டிருக்க, நான் உற்று நோக்குபவனைப் போன்று இருக்கிறேன் " எனக் கூறினார்கள்.


                  (இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா  - ஸஹீஹ் முஸ்லிம்.)



                 எந்த இரவில் என்னை (மிஃராஜுக்கு) அழைத்துச் செல்லப்பட்டதோ அந்த இரவில் மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை சந்தித்தேன். உடலில் சதைப்பற்று அதிகமில்லாத நீண்டமனிதராக தலை வாரியவர்களாக "ஷானுஆ" (அழுக்குகளை விட்டுத் தூய்மையானவர்கள்) கூட்டத்தைச் சேர்ந்த ஆனவர்களில் உள்ளவர்களைப் போன்று இருந்தனர் என்பதாக வர்ணித்துக் காட்டினார்கள்.


              ஈசா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களைச் சந்தித்தேன். உயரமோ குள்ளமோ இல்லாத சராசரி உயரத்தைக் கொண்டு உருவத்தை உடையவராக, குளித்துவிட்டு குளியறையிலிருந்து வெளியேறுபவரைப் போன்று இருந்தார் என அவர்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்தார்கள்.


             இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை நான் கண்டேன் நான்தான் அவர்களது மக்களில் அவர்களுக்கு மிக்க உவப்பானவனாக இருந்தேன் எனக் கூறினார்கள்.


             இருபாத்திரங்களை எனக்காகக் கொடுக்கப் பெற்றேன். அதில் ஒன்றில் பால் இருந்தது. மற்றொன்றில் மது இருந்தது. இரண்டில் எதை விரும்புகிறீரோ அதை எடுத்துக் கொள்வீராக! எனக் கூறப்பட்டது. பாலை நான் எடுத்துக் குடித்துவிட்டேன்.


          "இயற்கைக்கு  (மார்க்கத்திற்கு)  வழிகாட்டப்பட்டீர்! அல்லது இயற்கையை (மார்க்கத்தை) எடுத்துக் கொண்டுவிட்டீர்!" என அவர் (ஜிப்ரயீல்) கூறினார். "நிச்சயமாக நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உமது உம்மத்தார்கள் வழி கெட்டிருப்பர், எனத் தெரிந்து கொள்வீராக!" எனவும் (ஜிப்ரயீல்) கூறினார்.


                                      தொடரும்............ 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad