🌹நபி வாசலில் யாசகம் 🌹
🌹 நபி வாசலில் யாசகம்.....🌹
யா ரஸூலல்லாஹ்!
அன்றய புனித மதீனா ஷரீஃபின் மஸ்ஜிதுன்னபவி பள்ளியில் தாங்கள் அதிகாலை தொழுது
வெளிவரும் வேளையில்,
சிறார் கூட்டம் புது மலர்களாய் வீதியெங்கும் சிரசை தாழ்த்தி கைகளை ஏந்தி வரிசை கட்டி
நிற்பர், நபிகளுங்கள் நறுமணம் கமழும் குளிர் கரம்
தங்கள் மேனியில்
தடவப்பட வேண்டி,
தாங்களும்
தங்கத் தளிர்மேனியுடன் ஆங்கிருக்கும் பூந்தளிர்களை
தேன்கனியிதழால்
முத்தி முகர்ந்து பஞ்சுக்கரங்களை அவர்கள் புரம் நீட்டி பிஞ்சுக்கன்னம் தடவி
நஞ்சுத்தன்மை நீக்கினீர்!
அன்று கெஞ்சிக் கொஞ்சி பெற்றுக்கொண்ட பேரின்ப பெருந்தகையாளர்களெல்லாம் பின்பு பெருங்கொடையாளர்களாய்,
பெரும் ஞான நவமணிளாய்,
மின்னிப்பிரகாசித்து என்றும் யுகம் மெச்சும் சுகம் பெற்றனர்!
நாங்களோ!
அந்த நிகழ்வுகளடங்கிய ஏடுகள் படித்து பரவசித்தழுத
கன்னக் கோடுகளுடன்
எம் கேடுகள் நீங்கக் கோறி நித்தமும்
கவிப்பாடுகள்
அனுப்பி வைக்கிறோம்!
தங்களுடன் ஒரு நிமிடமேனு
மிருந்தனுப்பவிக்கும் நன்மையை நாம் பெற்றோமில்லையே,
என்று புலம்பியழும் சிலந்திப் பூச்சிகளாய் சிக்கிததவிக்கிறோம்!
நாங்கள் தங்களிடம் வர இயலாவிடினும்
தாங்கள் எங்களிடம் வருவது சாத்தியமன்றோ!
அந்த சூத்திரமறிந்து
சுகம் பெற தவிக்கும் காலி பாத்திரமான இதயம் கொண்டு
நாளும் துடிக்கிறோம்!
நாளிகைகளும் எம்மை கேலி செய்கின்ற
தோவென்று வெட்கமும் வேதனையும் வாட்டுது யா ஹபீபே!
ஒவ்வொரு இரவும் கண்ணுறங்க மறுக்குது!
நெஞ்சம் துடி துடிக்குது!
தஞ்சம் தாருங்களேன்!
கெஞ்சல் பாருங்களேன்!
இரக்கத்தின் சுரங்கமே தாங்களல்லவோ நாயகமே!
உங்கள் இதய அரங்கத்தில் இருப்பது நாங்களல்லவோ
நற்றவமே!
யா உம்மத்தீ
யா உம்மத்தீயென்று
மன்றாடி எங்களை திண்டாடி நிற்கவிடாமல்
சுவன் சேர்க்கும்
பவனல்லவோ தாங்கள்!
எங்கள் அரவணைப்பே!
அடைக்கலமே!
அபயக்காப்பே!
உபாயம் வழங்கும்
உரிமை கீதமே!.......
✍🏻 _ எம், சலீமாபானு பிலாலிய்யா......
No comments