மிஃராஜ் பற்றி சிறு துளிகள் தொடர் - 4
நான் ஹிஜ்ருல் (கஃபாவில் உள்ள ஹிஜ்ரு இஸ்லாமாயீல் என்ற இடத்தில்) எனை நான் கண்டவனாக இருந்தேன். குறைஷியர் என் இரவுப் பயணம் (மிஃராஜ்) பற்றி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். பைத்துல் முகத்தஸில் உள்ள அனேக செய்திிகள் பற்றி என்னிடம் (ஐயத்துடன் கேேள்வி) கேட்டுக் கொண்டிருந்தனர். அவைைகள நான் மனதில் இருத்திக் கொள்ளவில்லை. (அக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்) கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டேன்் அதற்கு முன்பு அதுபோன்ற சிரமத்திற்கு நான் ஆளாகவே இல்லை. (அப்பொழுது) அல்லாஹ் அதையே(கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க உதவியாக பைத்துல் முகத்தஸை) எனக்கு உயர்த்திக் காட்டினான். நான் அதன்பால் உற்று நோக்குகிறேன். அதன்பிறகு அவர்கள் எதைக் கேட்டாலும் நான் அதுபற்றி (சரிியாக) அறிவித்து கொடுக்காமலில்லை.
நபிமார்களின் ஒரு கூட்டத்தாரில் நான் என்னை கண்டேன். அப்பொழுது மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழக்கூடியவர்களாக இருந்தனர். நிச்சயமாக அவர்கள் ஷானூஆ கூட்டத்தைச் சேர்ந்த ஆண்களில் உள்ளவரைப் போன்று கட்டான உடலுடன் சதைக் குறைந்த மனிதராக இருந்தனர் (அதற்கடுத்து) அதேநேரத்தில் மர்யமின் மகன் ஈசா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். மக்களில் அவரைப் போன்ற தோற்றத்தில் இருப்பவர் உர்வாபின் மஸ்ஊது அத்தஃபீயாவார். (அதற்கடுத்து) அதே நேரத்தில் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். மனிதர்களில் அவர்களுக்கு மிக உவப்பானவர் உங்கள் தோழர் (ஆகிய நான் தான் என்று காட்டினார்) என்றனர். தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்களுக்கெல்லாம் இமாமாக நின்று தொழவைத்தேன். தொழுகையை நான் முடித்துக் கொண்ட போது,
"முஹம்மதே! நரகத்திற்குப் பொறுப்பாளர் மாலிக் இவர்தாம். இவருக்கு ஸலாம் கூறுங்கள்" என்று ஒருவர் கூறினார். ஆகவே அவரின்பால் திரும்பினேன். அவரே எனக்கு ஸலாம் கூறி முந்திக் கொண்டார் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்.)
மஸீஹ் (ஈசா) அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் தஜ்ஜாலையும் பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறியது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு நாள் மக்களுக்கு மத்தியில் மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். நிச்சயமாக பரக்கத்துக்களை வழங்கும் அல்லாஹ் ஒற்றைக் கண் உடையவனல்லன் எனக்கூறினார்கள். மஸீீஹுத்தஜ்ஜால் வலக்கண் குருடன். நிச்சயமாக அவனது கண்துருத்திக்் கொண்டிிருக்கும். திராட்சையைப் போன்றிருக்கும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். கடந்த இரவு (அல்லாஹ்) கஃபாவில், கனவில் எனக்குக் காட்டினான். அப்பொழுது மிகவும் சிவப்பில்லாத மாநிறத்தையுடைய, நீங்கள் பார்க்கூடிய மனிதர்களின் நிறத்்தில் மிக அழகான நிறத்தையுடைய, ஒரு மனிதர் அவரின் முடி அவரது இருதோள்பட்டைக்கிடையில் இருக்க, தலைவாரியவாறு அவர் தலையிலிருந்து தண்்ணீர சொட்டிய நிலையில் அவரது இருக்கைகளையும் இரு மனிதர்களின் தோள்பட்டையின் மீது வைத்தவராக, அவ்விருவருக்கு மத்தியில் அவர் இருக்க, அல்லாஹ்வின் வீட்டைத் தவாஃபு செய்யக் கூடியவராக இருந்தார். " இவர் யார்?" எனக் கேட்டேன். இவர்தாம் "மர்யமுடைய மகன் மஸீஹ்" எனக் கூறினார்கள்.
"வலக்கண் இல்லாத ஒற்றைக்கண்ணை உடையவனாக இருக்க வலிமை மிகுந்த உடல் கட்டுடைய ஒரு மனிதனை அவர்களுக்கு அப்பால் நான் பார்த்தேன். நான் பார்த்த மனிதர்களில் இப்னுக(த்)தன் என்ற மனிதரைப் போன்று இருந்தார். அவன் தனது இருக்கைகளையும் இரண்டு மனிதர்களின் தோள்" பட்டைகளின்மீது வைத்தவாறு (அல்லாஹ்வின்) வீட்டை தவாஃபு செய்து கொண்டிருக்க நான் கண்டுவிட்டு," இவர் யார்? " என்று கேட்டேன்." இவன்தான் அல்மஸீஹுத் தஜ்ஜால் எனக் கூறினர்.
தொடரும்........
No comments