சிட்டுக்குருவி
| *ரஹ்மத் ராஜகுமாரனின் எழூத்தில் ......✍🏻* |
♻ *-சிட்டுக்குருவி -* 🐦
ஒரு சமயம் நபிஸல் அவர்கள் வெட்டுக் கிளியை மதீனா முழுவதும் தேடச் சொன்னார்கள் அப்போதைக்கு அது கிடைக்கவில்லை என்றதும் நபிஸல் அவர்கள் பதட்டம் அடைந்தார்கள்
காரணம் கேட்டதற்கு வெட்டுக் கிளி இப்பூமியில் இல்லாமல் போனால் அன்றைக்கு கியாமத் நாளாக இருக்கும் என்றார்கள்
பின் மதீனாவிற்கு தொலை தூர கிராமத்தில் கண்டுபிடித்தாக சொன்னதும் நபிஸல் அவர்கள் அமைதி பெற்றார்கள்
நம்மைச் சுற்றி உள்ள ஜீவராசிகளின் ஜீன் இல்லாமல் போகும் போது நாம் எதையோ நம் வாழ்க்கையில் இழக்கிறோம்
அன்னப் பறவை கம்பளி யானை தாடிப் புலி கடைசி ஒன்றிலிருந்து காப்பாற்றிய பாண்ட கரடி இப்படி சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஜீவராசிகள் இல்லாமல் போய்விட்டது
சிட்டுக் குருவியைப் பற்றிய புதுத் தகவல் . . . . . .
என் தகப்பனார் முகம்மது சாகிப் அவர்கள் 97 வயதில் தவறி கீழே விழுந்ததில் காலில் தொடை எலும்பில் சின்ன முறிவு பண்டார விளை வைத்தியர் கட்டுப் போட்டு நடக்க தயாரிக் கொண்டிருக்கிறார்
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேலப்பாளைய மாட்டு சந்தை பக்கம் உள்ள மதீனா நகரில் என் தம்பி வீட்டில் எல்லோரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக ஒரே சமையல் அங்கே எல்லோரும் தங்கி இருந்து என் தகப்பனாரை நன்கு கவனித்து வருகிறோம்
இந்த கான்கிரீட் போட்ட பெரிய பங்களாவில் திடீரென சிட்டுக் குருவிகள் நிறைய வந்தன வீட்டில் ஆங்காங்கே அமர்ந்து கிரீச் சப்தம் . இந்த சப்தம் கேட்டு எவ்வளவு வருடங்கள் ஆச்சி என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது ...
எங்கள் கொத்தனார் கணேசன் சொன்னார்
" கூட்டுக் குடும்பமாக இருக்கும் வீட்டில் மட்டும்தான் சிட்டுக் குருவி வாசம் செய்யும் " என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது மேலும் அவர் சொன்னார் எங்கள் கிராமத்தில் கூட கூட்டுக் குடும்பமாக இருக்கிற வீட்டில் மட்டுமே சிட்டுக்குருவி வாசம் செய்து கூடு கட்டுகிறது அது கான்கிரீட் வீடாக இருந்தாலும் சரி தனிக் குடித்தனம் இருக்கிற ஓலை குடிசையில் சிட்டுக் குருவி வருவது இல்லை
நீங்கள் இதனை ஆய்வு செய்து தகவல் சரியா ? சொல்லுங்கள்,,,
- ரஹ்மத் ராஜகுமாரன் -
No comments