Header Ads

  • Breaking News

    🌹பரிசுத்த யாசகம்🌹




    🌹பரிசுத்த 

    யாசகம்....🌹


     இறை ஜோதியில் கலந்து நிறைமயமான மறை தந்த மா நபியே!


    தங்கள் திருப்புகழ் பேசாத நேரமில்லை, நிமிடமில்லை நாயகமே!


    அதிகாலை எழுந்து, புது நாளாயுணர்ந்து, 

    புன்னகையேந்துவதெல்லாம்

     நன்னய நாயகரின் பரிசுத்த உம்மத் சமுதாயத்தில் நானுமொரு அங்கம் 

    எனும் சீரிய சிந்தை எமக்குள்  வந்தனித்து  சிலாகிக்கும் நேரிய எண்ணங்கள் மட்டுமே,


    ஏனென்றால்? எங்களுடனிருந்து மாறுபடுத்தி மகிழும்  கூறிய வாளாய்  நஃப்ஸும் ஷைத்தானும்,

        பள பளத்துப் பகட்டுக் காட்டியழைத்திடினும், 


    தங்கள் காதல் கனிரசமாய் எம் இதழூறும் ஸலவாத்து 

    அந்த துஷ்டர்களிடமிருந்து 

    தூறாக்க பிணை நின்று   அதன் விணை நீங்க தக்க துணையாகின்றது!


    ஆதலால் யா ஹபீபல்லாஹ்!

      அந்த விஷ அம்புகளின் வம்புகளில் சிக்குண்டு சீரழியாமல் 

    உங்கள் புகழாரப் பூவைச் சுற்றி ஏற்றிப் போற்றும்  வண்டுகளாய் எங்களை மாற்றித் தேற்றிடுங்கள்!


     எங்கள் முந்திய பாவங்களோ' 

    மூட்டை மூட்டையாய் 

    குவிந்துள்ளன!

    சிந்திய கண்ணீரால் 

    பரிசுத்தம் பெருதற்கு, 

    உங்கள் பாதார விந்தக் காட்சி தந்துவவுங்கள்  

    பரிபாலரான பயகம்பரே!


    அந்த ஆதார பந்தம் தவிற்த்து,

    வேறெதுவும் எம் பாவங்களை விரைவில் களைந்தெறிய முடியாது கண்மணியே கரைசேர்க்கும் கதியே!

     காருண்ய நிதியே!

     பேரன்பு பதியே!........


    ✍🏻_ எம், சலீமாபானு பிலாலிய்யா......

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad