ரிக்வத் என்ற பாத்திரம்
காலத்தின் மிக அற்புதமான விஷயம் என்வென்றால், நாம் இரண்டு பேரும் பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்தாலும், உங்களுக்கு ஒரு காலமும், எனக்கு ஒரு காலமும் கணிக்கப்படுகிறது. இதுயெப்படி? என்னெ விபரீதமாக பேசிகிறீக? ஆம் அன்பரே. உண்மை அதுதான். குர்ஆன் சொல்லும் நிகழ்வை கவணியுங்கள்.
அதுமட்டுமல்ல காலத்தால் முந்தியவர்களையும் காலத்தால் பிந்தியவர்களையும் சந்திக்கலாம் என்கிறது குர்ஆன்.
குகையில் தூங்கிய ஏழு வாலிபர்கள் 300 வருடங்கள் காலம் கழித்து, காலத்தால் 300 வருடங்கள் பிந்தியவருர்களுடன் சந்தித்து பேசிய நிகழ்வை குர்ஆன் கூறுகிறது.
( ஸூரத்துல் கஹ்பு 18: 9 to25. )
நானூற்றி நான்கு சீடர்கள் பின் தொடரக் கானகம் வழியே பிரயாணம் செய்துக் கொண்டிருந்த நாகூர் நாயகம் எஜமான் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) அவர்கள் வழியிலே வயதான ஒரு தம்பதியரைக் கண்டார்கள். சீடர்களுக்கு அவர்களைக் காணப் பெரும் வியப்பாக இருந்தது, தோற்றத்திலும் சாயலிலும் இக்கால மனிதர்களைப் போல் அறவே காணப்படவில்லையே என்ற ஆச்சரியம்.
ஒரு சிறு குன்றுமேல் நின்றிருந்த அந்த வயோதிகத் தம்பதியர்கள் "ஷாஹுல் ஹமீதே! எங்களின் அருமை மகனே! " என அழைத்தார்கள், எஜமான் நாயகம் மட்டும் அவர்களை நெருங்கிச் சென்றார்கள்.
அந்த வயோதிக தம்பதியர் உடன் சில நிமிடங்கள் பேசி விட்டு ஆற தழுவி அவர்களின் துஆவை பெற்று திரும்பி வந்தார்கள்.
எஜமான் நாயகம் அவர்கள் திரும்பி வந்தபோது அவர்கள் கையில் திருவோடு போன்ற பாத்திரம் இருக்க கண்ட சீடர்கள் 'எஜமானே! இது என்ன? என கேட்டார்கள்.
" இதை ரிக்வத்' என்பார்கள். தேவைப்படும் போது தேவைப்பட்டால் உணவை இதினின்று பெற்றுக் கொள்ளலாம்' என்றார்கள் எஜமான் நாயகம் அவர்கள் .
ஹழ்ரத் முயினுத்தீன் அவர்கள் கேட்டார்கள் எஜமானே! அந்த முதிர்ந்த தம்பதியர்கள் யார்?
எஜமான் நாயகம் அவர்கள் புண்ணகையுடன் கூறினார்கள் அவர்கள்தான் மனித குலத்தின் ஆதிப் பெற்றோரான தந்தை ஆதம் தாய் ஹவ்வா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் . இந்த அட்சய பாத்திரத்தை அவர்கள் தான் வழங்கினார்கள்.
என! ஒருமித்த குறலுடன் அவர்கள் திரும்பிப் பார்க்க ஆதிப் பெற்றோர் மறைந்து விட்டிருந்தார்கள்.
நாயகம் ரஸூலே கரீம் ( ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விண்ணுலகப் பயணமான மிஹ்ராஜ்ஜின்போது பயணத்திற்கு சற்று முன்பாக கடந்த காலத்தில் வாழ்ந்த நபிமார்களுக்கு தொழுகை நடத்துகிறார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களைப் பின்தொடர்ந்து கடந்த கால நபிமார்கள் அணி அணியாக நின்று தொழுகிறார்கள்.
இப்போது நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்களுக்கு ஒரு காலம் . மற்றய நபிமார்களுக்கு ஒரு காலம். ஆனால் இந்த சம்பவம் ஏக காலத்தில் ஒரே இடத்தில் பைத்துல் முகத்தஸில் இந்த பூமியில் நிகழ்கிறது. என்ன அன்பர்களே உங்கள் புருவம் உயர்கிறதா !!!
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments