நற்றவ நாயகரே
🌹 நற்றவ நாயகரே....🌹
எங்கள் முத்து முஹம்மதரே!
முழுமதியும் வெக்கி சொக்கும் வேந்தரே!
உங்கள் உமிழ் சுவையுண்டு மகிழ்ந்திடின் முக்கனிச்சாரும்
ருசித்திடுமாமோ?
உங்கள் பொற்கரம் தொட்டு தழுவிய சிறு பிள்ளைகளும் அந்த குளிரூட்டலால் தினம் தினம் மதீன வீதியில்
மதி மயங்கி காத்துக் கிடந்ததன்றோ?
கணமணி அனஸ் நாயகம் தங்கள் தங்கத்திருமேனி சாய்த்து சற்றுறங்கும் வேளையில் உங்கள் வதனத்தில் சொட்டிய முத்திலும் வெண்மைமிகும் வியர்வைத்துளிதனை தாயார் உம்மு சுலைமின் தூண்டுதலின் வேண்டுதலால் மென்மையாய்த் தடவியெடுத்து கண்ணாடிக் குடுவையில் நிறப்பியது கண்டு சட்டென விழித்த தங்களின் வெள்ளைதங்கத்தில் படர்ந்த கருவிழி வைரம் மின்ன என்னவென்று வினவியதும்,
ஓரத்தில் நின்ற ஹஜ்ரத் உம்மு சுலைம் உயர்பெண்மணி
யா ரஸூலல்லாஹ்!
எங்களுக்கு அத்தர் அம்பரைவிட தங்களின் முபாரக்கான வியர்வையே நறுமணம் கூட்டும் ஆதலால் தங்கள் நறுமணக் கோவான இவ்வியர்வை மணத்தை நீண்ட நாட்கள் பத்திரமாய் வைத்து ஒரு துளியை எங்களிடமுள்ள அத்தர் அம்பரில் கலந்து எங்களை மணம் மிகுதியாக்கிக் கொள்ளும் யுக்தியும் பக்தியும் தான் நாயகமே!
என்று புன்னகை பூ உதிர்த்து
பொக்கிஷ வியர்வை பெற்றனரன்றோ?
இப்படியான தங்களின் எண்ணற்ற நற்றவங்கள் எங்கள் இரவு நேரத்து சிந்தனைக் கீற்றாய் எமக்குள் வந்தனை செய்து நிந்தன் நினைவிற்குள் நித்தியமும் எம்மையழைத்து செல்கின்றது!
எம்மிதயத்துள் தீராக்காதலாய் தினந்தோறும் வலம் வரும் அந்த அற்புத எண்ணங்களின் வண்ணங்களே, எம்முள் கள்வனாயிருக்கும் நஃப்ஸ், ஷைத்தானை
சங்கமித்து பங்கம் விளைவிக்க விடாமல்
திங்களே திவ்விய ஹபீபே,
எம்மைக் காப்பாற்றிக் கரைசேர்த்து வருகின்றது!....
✍🏻_ எம், சலீமாபானு பிலாலிய்யா.........
No comments