Header Ads

  • Breaking News

    யாசகமாய் இவ்வாசகம்...



            🌹யாசகமாய் இவ்வாசகம்....🌹


     யா ரஸூலல்லாஹ்!

    எங்கள் இருலோக நிலவே!

    இவ்வுலக மலரே!

    எவ்வுலகிலும்  இறை ஜோதியே!


    பாடப்படுவது உங்கள் புகழாரம்!


    பேசப்படுவது உங்கள்

    புகழாரம்!


    நினைக்கப்படுவது உங்கள் புகழாரம்!


    நிலைக்கப் போவது உங்கள் புகழாரம்!


    நிம்மதியளிப்பது உங்கள் புகழாரம்!


    எத்திக்கும் தித்திப்பதும் சித்திப்பதும் உங்கள் புகழாரம்!


    பறவைகளின் சிங்காரமான  ஓங்காரமும்  ரீங்காரமும் உங்கள் புகழாரம்!


    தென்றலில் மெல்லிசை பாடுவதும் உங்கள் புகழாரம்!


    மரங்களின் கிளையசைந்து இசைப்பதும் உங்கள் புகழாரம்!


    பூக்களின் இதழ் விரிந்து மணம் கமழ்வதும் உங்கள் புகழாரம்!


    சூரியன் வீரியமாய் எழுந்து வெளிச்சம் விளம்புவதும் உங்கள் புகழாரம்!


    சந்திரன் மந்திரமோதி மாலைப் பொழுதில் மயக்கத்திலிருந்து விழித்தெழுவதும் உங்கள் புகழாரம்!


    விண் தாரகைகள் கண் சிமிட்டிப் பேசுவதும் உங்கள் புகழாரம்!


    கடல் திடல் வாழ் உயிரினங்கள் அத்துணையும் வல்லிறைக் காதலர் தங்கள் பால் நல்லுரையாய் நாயகப் பாக்கள் பாடித்தான் பயனடைகின்றன!


     யா ரஸூலல்லாஹ்!  தங்களைப் புகழாவிடில்  புகழென்ற வார்த்தையே புவியதனில் வந்திருக்காது நாயகமே!


    ஏனென்றால்?

    அது இறைத் துதியாகும்!

    மறைத் துதியாகும்!

    நிறைத் துதியாகுமன்றோ?


    துதிகேட்டு நற்கதி வழங்கும்  தூயோன் ரஸூலே!

    விரைந்து  வாரும்!

      எங்கள் வெறுமையைத் தீரும்!

     பொருமையைத் தாரும்!

    கருமங்கள் போக்கும் காமிலரே!


    அருமைக்கும் பெருமைக்கும்  மறுமைக்கும்  சொந்தம் பெற்ற சோபிதரே!


    எங்கள் வெறுமை வாட்டுகின்றது!

    தாங்கள் மட்டும் எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தால் தகுமோ?


    எங்கள் கண்களுக்கு தங்கள்  திருவதனம்  காட்டித் தந்தால் ஆகாதா?


     வியர்வை மணம் வீசித் தந்தால் எங்கள் பாவக்கறையோடுமன்றோ?


     பரிதாபக் குரல் கேட்டு பக்கம் வந்து தங்கள்  பொற்கரம் முத்தத் தாருங்கள் முத்து மணியே!

    ரத்தினமே!

    எத்தினமும் உம் நினைவே!

    முழு மதியே!

    முஹம்மதரே!


    இவையனைத்தும் காதல் தாகத்தில் மோகம் கூடி மோன நிலையில் பாடிய கானக்கோர்வைதான் நாயகமே!


    இது கவியுமல்ல!

    கற்பனையுமல்ல!

    விமர்சனமுமல்ல்!

    தரினத்திற்கு கரிசனம் வேண்டித்தவித்துக் கதைக்கும் 

    நிதர்சனம்!........


    ✍🏻_ எம்,  சலீமா பானு பிலாலிய்யா!....

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad