திருமணம்
திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும்*💠கவலைப்படாதீர்கள்..!💠*
_நிச்சயமாக அல்லாஹ் எம்மோடு இருக்கிறான்..._
_*لا تحزن إن الله معنا*_
🔹 கணவன் சரி இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
*ஆசியா நாயகி அவர்களுக்கும் கணவன் (பிர்அவ்ன்) மோசமானவன் தான்!*
🔹 மனைவி சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
*லூத் நபி, நூஹ் நபி (அலை) அவர்களின் மனைவியும் மோசமானவர்கள்தாம்!*
🔹 குழந்தை இல்லையே என்ற கவலையா....???
கவலைப்படாதீர்கள்!
*மூஃமின்களின் தாயார்கள் ஆயிஷா ரலி அவர்களுக்கும்,
ஸைனப் ரலி அவர்களுக்கும் குழந்தை இல்லை!*
🔹 பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
*நூஹ் நபியின் மகனும் மாறு செய்தவன் தான்!*
🔹சொந்த வீடு இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
*ஹாஜரா (அலை) அவர்கள் பாலைவனத்தில் வானம் பார்த்த பூமியில் வாழ்ந்து வந்தார்கள்!!!*
🔹 தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
*அய்யூப் (அலை) அவர்களுக்கும் நோய் வந்தது!*
🔹 பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
*இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தகப்பனும் மாறு செய்தவர்தான்!*
🔹 படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
*எல்லா நபியும் ஆடுதான் மேய்த்தார்கள்!*
🔹 உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப்படாதீர்கள்!
*யூசுஃப் நபிக்கும் அதுதான் நடந்தது!!!*
🔹திருமணம் ஆகவில்லையே எனக்கவலைப்படுகிறீர்களா?
*மர்யம் அலை அவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையவில்லை*
🔹 கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீர்கள்!
*கடலையே பிளந்து அற்புதத்தை கண்ணால் கண்ட பின்னும் மூஸா நபியின் முதுகில் ஒரு சமுதாயமே குத்தியது!*
🔹 உம்மீதும்,குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீர்கள்!
*கொடைவள்ளல் அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள்,அல்லாஹ்வின் தூதரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) மீதும் அவதூறு சொன்ன சமுதாயம் தான் இது...*
நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப்போகிறார்கள்!
மனிதர்கள் அப்படித்தான்!
*எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!*
*சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை!*
*ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித்தான் வரும்!.*
*எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.*
*ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப்பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.*
*படியுங்கள்... பகிருங்கள்...*
-------------------------
No comments