ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதற்குரிய சான்றுகள்
🌻 *ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதற்குரிய சான்றுகள்* 🌻
அல்லாஹ்தஆலா ஒருவன் என்பதின் மீது அறிவிக்கின்ற அத்தாட்சிகள் இவ்வையகத்தில் ஏராளமாக இருக்கின்றன. எப்பொருளும் அவனைப் பற்றி அறிவிக்காமல் இல்லை.
பெரியார் ஒருவர் *தவ்ஹீது சம்பந்தமாக ஆயிரம் அத்தாட்சிகளைக்* கொண்டு ஒரு நூலை எழுதியிருந்தார்.
அதனைப் பார்த்த மூதாட்டி ஒருவர், *"இந்தப் பெரியாருக்கு அறிவு மழுங்கிப் போய்விட்டதா?"* என்று கூறி பின் வரும் பாடலைக் கூறினாள்:
*سماء وارض وثم الجبال*
*كذاك البحار له شاهد*
*وفي كل شي له آية*
*تدل على أنه واجد*
*"வானமும் பூமியும், மலைகளும், கடல்களும் அவனுக்கு சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன. அவன் ஒருவன் தான் என்பதின் மீது அறிவிக்கின்ற அத்தாட்சி ஒவ்வொரு பொருளிலும் இருக்கிறது".*
எனவே, அல்லாஹ்வை அறிவதற்கு இவ்வுலகிலுள்ள பொருட்கள்
போதுமானவை. தனிப்பட்ட ஆதாரங்கள், அத்தாட்சிகள் எதுவும் தேவையில்லை. *மனிதன் தன்னைப் பற்றிச் சிந்தித்தால் அதுவே அவனுக்குப் போதுமானதாகும். உரியில் தயிர் இருக்க ஊரெல்லாம் வெண்ணெய் தேடி அலைந்த கதையாய் இருக்கலாகாது.*
ஆகையால், மனிதன் தன்னைத்தானே சிந்திக்கும் பொழுது இறந்த பின் நிலைத்திருக்கும் வழியைக் கண்டு கொள்வான். சிந்தனை செய்யுமிடம் இதயமாக இருப்பதால் தான் அதனைப் பற்றி,
*قلب المؤمن عرش الله*
*"முஃமினுடைய இதயம் அல்லாஹ்வின் சிம்மாசனம்"* என்று கூறப்பட்டுள்ளது. அந்த இதயத்தின் மூலம் *'ஆலம்'* என்ற
இப்பிரபஞ்சத்தைச் சிந்திக்கும் பொழுது அது அதனைப் படைத்தவனின் மீது தெளிவாக அறிவிப்பதைக் கண்டு கொள்ளலாம்.
*ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)* அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, *"அல்லாஹ் எங்கிருக்கிறான் ?"* என்று கேட்டபோது :
*اتطلب الاين مع العين*
_______ *"கண்ணால் கண்டு கொண்டே எங்கே என்று தேடுகிறாயா ?* என்று அவருக்கு பதிலளித்தார்கள். இதனை விளங்கிக் கொண்ட அந்த கிராமவாசி பின்னால் பெரும் ஆரிஃபாகிவிட்டார்.
*البعر يدل علي البعير،*
*والرفث علي الحمير*
*ஒட்டகப்புழுக்கை ஒட்டகத்தின்மீது அறிவிப்பது போலும், கழுதை விட்டை கழுதையின் மீது அறிவிப்பது போலும் இந்த ஆலம் - பிரபஞ்சம் - அதனைப் படைத்தவன் உண்டென்பதின் மீது அறிவித்துக் கொண்டிருக்கிறது.*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
நூல் : *மார்க்க சட்டக் கருவூலம் "மஙானீ"*
பக்கம் : *74, 75*
நூலாசிரியர் : *"அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்"*
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை. {Yaseenis.com}*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
No comments