அல்லாஹ்வை அறிகிறவர்கள்
🌻 *அல்லாஹ்வை அறிகிறவர்கள் ஏன் குறைவாக இருக்கவேண்டுமென்ற கேள்வியும், பதிலும்*🌻
"அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்குரிய வழி மிக எளிதாக இருந்தும் இலட்சத்தில் ஒருவர் தானே அல்லாஹ்வை நன்கு அறிந்தவராக - ஆரிஃபாக - ஆகின்றார்?" என்று கேட்கப்பட்டால், *மனிதனுடைய அறிவு கூர்மையானதாகவும் அல்லாஹுதஆலா பொருட்களில் வெளிப்படுவது கடுமையாகவும் இருக்கின்ற காரணத்தினாலாகும்.*
இதற்கு உதாரணம் : வௌவாலாகிறது, மிகவும் கூர்மையான பார்வையுடையதாகும். அதனால் தான் அதற்குக் கடும் இருளிலும் பார்க்கமுடிகிறது. ஆனால், சூரிய ஒளியில் அதனால் பார்க்க முடிவதில்லை. கூர்மையான பார்வையினால் சூரிய ஒளியைக் காண முடியாதது போல் கூர்மையான அறிவுள்ள மனிதனால் கடுமையாய் வெளிப்படும் அல்லாஹ்வின் ஆற்றலைக் கண்டு கொள்ள முடிவதில்லை.
*பெரியார் ஒருவர் பாடுகிறார்:*
*انى يغيب وليس يوجد غيره*
*لكن اشد ظهوره اخفاه*
*"அவனல்லாதது (எங்கும்) பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் அவன் எங்கே மறைந்திடுவான் ? எனினும், அவன் கடுமையாக வெளியாகி இருப்பது அவனை மறைத்துவிட்டது,"* என்று பாடியுள்ளார்.
மனிதன் உலகப்பண்பாடுகளின் அழுக்குகளில் தோய்ந்து அதிலேயே தன்னுடைய பார்வையைக் கூர்மையாக்கி, அல்லாஹ்வின் பால் சேர வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல், அகக்கண் குருடாகிவிட்ட காரணத்தால், அல்லாஹு தஆலா வெளியாகி இருப்பது மனிதனுக்கு மறைவாகிவிட்டது. அந்த மறைவை வெளிப்படுத்துவதற்காக தன்னுடைய ளாஹிரான வெளித் தோற்றமுடைய திருநாமத்தைக் கூறியுள்ளான்.
அதனையும் அதனைச் சேர்ந்த மற்ற திருநாமங்களையும் நாம் சிந்தித்து அவற்றின் கருத்துக்களை விளங்கினால் மறைவு தெளிவாகும். அந்தத் திருநாமங்களுக்கு *'உம்மஹாத்துல் அஸ்மா' (திரு நாமங்களின் தாய்மார்கள்)* என்று கூறப்படும். எனவே :
*هو الاول والأخر والظاهر والباطن*
*"அவன் துவக்கமின்றி முந்தியவன்; முடிவின்றி கடைசியானவன்; ஏகமாய் வெளியானவன்; எல்லாப் பொருள்களிலும் மறைந்திருப்பவன்"* என்பது இவற்றின்
பொருளாகும்.
எனவே, சிந்தனையை வாகனமாக்கி, உனக்கு ஏற்படும் பலவகை இடையூறுகளைக் கடந்து அசல் நோக்கமாகிய எஜமானின் சந்திதானத்தை அடைந்திட வேண்டும்.
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
நூல் : *மார்க்க சட்டக் கருவூலம் "மஙானீ"*
நூலாசிரியர் : *அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்"*
பக்கம் : *75,76*
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
No comments