விருந்தாளிகளின் தந்தை
*விருந்தாளிகளின் தந்தை*
ﻭﻛﺎﻥ ﺇﺑﺮاﻫﻴﻢ اﻟﺨﻠﻴﻞ ﺻﻠﻮاﺕ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻼﻣﻪ ﺇﺫا ﺃﺭاﺩ اﻥ ﻳﺄﻛﻞ ﺧﺮﺝ ﻣﻴﻼ ﺃﻭ ﻣﻴﻠﻴﻦ ﻳﻠﺘﻤﺲ ﻣﻦ ﻳﺘﻐﺪﻯ ﻣﻌﻪ ﻭﻛﺎﻥ ﻳﻜﻨﻰ ﺃﺑﺎ اﻟﻀﻴﻔﺎﻥ ﻭﻟﺼﺪﻕ ﻧﻴﺘﻪ ﻓﻴﻪ ﺩاﻣﺖ ﺿﻴﺎﻓﺘﻪ ﻓﻲ ﻣﺸﻬﺪﻩ ﺇﻟﻰ ﻳﻮﻣﻨﺎ ﻫﺬا ﻓﻼ ﺗﻨﻘﻀﻲ ﻟﻴﻠﺔ ﺇﻻ ﻭﻳﺄﻛﻞ ﻋﻨﺪﻩ ﺟﻤﺎﻋﺔ ﻣﻦ ﺑﻴﻦ ﺛﻼﺛﺔ ﺇﻟﻰ ﻋﺸﺮﺓ ﺇﻟﻰ ﻣﺎﺋﺔ ﻭﻗﺎﻝ ﻗﻮاﻡ اﻟﻤﻮﺿﻊ ﺇﻧﻪ ﻟﻦ ﻳﺨﻞ ﺇﻟﻰ اﻵﻥ ﻟﻴﻠﺔ ﻋﻦ ﺿﻴﻒ.
(إحياء علوم الدين :2/12 )
〰〰〰〰〰〰〰〰〰〰〰
இப்ராஹிம் நபி (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்கள் தம்முடன் அமர்ந்து உணவுன்ன வேறு ஆளில்லையென்றால் யாராவது இருக்கிறார்களா எனத்தேடி ஒன்றோ, இரண்டோ மைல் வரை செல்வார்கள்.
விருந்தாளிகளின் தந்தை என்பதாகும் அவர்களுடைய பட்டப்பெயர்.
விருந்தாளிகளை உபசரிப்பதில் அவர்களுடைய ஆர்வத்தின் பலனாக இன்றும் அவர்களது கப்ரு (ரௌழா) ஷரீஃபிற்கருகில் விருந்துபசரிப்பு நடந்துவருகிறது. மூன்று நபர் முதல் பத்து நபர் வரையிலும் சில சமயங்களில் நூறு நபர் வரையிலும் அவர்களுடைய கப்ருக்கருகில் வைத்து உணவருந்தாத இரவு கழிந்ததில்லை. அங்குள்ள சேவகர்கள் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
(இஹ்யா உலூமுத்தீன் :2/12)
No comments