இறைநேசர்களின் அற்புதங்கள்
🌻 *இறைநேசர்களின் அற்புதங்கள்* 🌻
இறைவன் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நல்லடியார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்துவான். இறைத்தூதர்கள் வழியாக அவ்வற்புதங்கள் நிகழ்ந்தால் அவற்றிற்கு முஃஜிஸா என்றும், இறைநேசர்கள் மூலமாக நிகழ்ந்தால் கராமத் என்றும் கூறப்படும்.
🌳 *பருவமற்ற காலத்திலும் பழவகைகள்* 🌳
இறைவன் கூறினான்:
*كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب*
அவரது (மர்யம்) அறையில் ஜகரிய்யா பிரவேசித்த போதெல்லாம் அவரிடம் ஏதாவதொரு உணவு உள்ளதைப் பார்த்துவிட்டு கேட்டார்: மர்யமே! எங்கிருந்து இது உனக்குக் கிடைத்தது? அவர் (மர்யம்) சொன்னார்: *இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கில்லாமல் வழங்குவான்.*
(அல்குர்ஆன் 3:37)
*أن بنت الحارث أخبرته أنهم حين اجتمعوا أستعار منها موسى يستحد بها فأعارته فأخذ ابنالي وأنا غافلة حين أتاه قالت فوجدته مجلسه على فخذه والموسى بيده ففزعت فزعة عرفها خبيب في وجهي فقال تخشين أن أقتله ما كنت لافعل ذلك والله ما رأيت أسيرا قط خيرا من خبيب والله لقد وجدته يوما يأكل من قطف عنب في يده وإنه لموثق في الحديد وما بمكة من ثمر وكانت تقول إنه لرزق من الله رزقه خبيبا*
(البخاري: 3045)
குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொன்று விடவேண்டுமென முடிவெடுத்து நேரமது. திராட்சை கொத்திலிருந்து குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் மக்காவில் எந்தப் பழமுமில்லை. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவு தான் அது. நேரில் பார்த்த ஹாரிஃதாவின் மகள் இதைக் கூறினார்
அறிவிப்பாளர் : *அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு),*
நூல் : *புகாரீ ஹதீஸ் எண் 3045*
பழவகைகளுக்கு பல்வேறு பருவ காலங்களுண்டு. குறிப்பிட்ட சில வகைப் பழங்கள் எல்லா பருவங்களிலும் கிடைக்காது. ஆனால் மர்யம் (அலை) அவர்களும் குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அப்பருவத்தில் இல்லாத பழங்களை உண்டுள்ளார்கள். இது இறைவன் அவ்விருவருக்கும் வழங்கிய அற்புதங்கள்.
☀ *இருள் விலக்கிய அகல் விளக்கு* ☀
*عن أنس بن مالك أن رجلين من أصحاب النبي صلى الله عليه وسلم خرجا من عند النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة ومعهما مثل المصباحين يضيئان بين أيديهما فلما افترقا صار مع كل واحد منهما واحد حتى أتى أهله*
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இரு தோழர்கள் விடைபெற்று சென்றனர். அப்போது கும்மிருட்டுள்ள இரவு நேரமாகயிருந்தது. அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக இரு விளக்குகள் போல ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விருவரும் தத்தமது
வீட்டிற்கு செல்வதற்காக பிரிந்து நேரத்தில் ஆளுக்கொரு விளக்கு அவர்கள் வீடு செல்கின்றவரை
வெளிச்சம் கொடுத்தது.
அறிவிப்பாளர்: *அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு),*
நூல்: *புகாரீ ஹதீஸ் எண் 3639*
இவ்விரு தோழர்களில் ஒருவரின் பெயர் உசைது இப்னு ஹுழைர், மற்றவரின் பெயர் அப்பாது இப்னு பிஷ்ர் (ரலியல்லாஹு அன்ஹு).
🌺 *மண்ணறையில் மறை ஓதுதல்* 🌺
*عن ابن عباس قال ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر وهو لايحسب أنه قبر فإذا فيه إنسان يقرأ سورة تبارك الذي بيده ملك حتى ختمها فأتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني ضربت خبائي على قبر وأنا لا أحسب انه قبر فإذا فيه إنسان يقرأ سورة تبارك الملك حتى ختمها فقال رسول الله صلى الله عليه وسلم هي المانعة هي المنجية تنجيه من عذاب القبر*
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு தோழர் வந்து சொன்னார்:
யா ரஸுலல்லாஹ்! ஒரு கப்ருக்கு மேலே அது கப்ர் என தெரியாமல் கூடாரம் அமைத்துத் தங்கினேன், அப்போது, கப்ருக்குள்ளேயிருந்தவர் முல்க் அத்தியாயத்தை முழுமையாக ஒதினார்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், நவின்றார்கள்: அந்த (முல்க்) அத்தியாயம் (நரக வேதனையை) தடுக்கும். ஈடேற்றத்தை கொடுக்கும்.
அறிவிப்பாளர்: *இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு),*
நூல்: *திர்மிதீ ஹதீஸ் எண் 2815*
❤ *மண்ணறையில் பேரொளி*❤
*عن عائشة قالت لما مات النجاشی کنا نتحدث أنه لا يزال يرى على قبره نور*
(அபீசீனிய மன்னர்) நஜாஷீ இறந்த பிறகு அவரது கப்ரில் ஒளி தென்பட்டுக் கொண்டேயிருந்தது என்று நாங்கள் பேசிக்கொள்வோம்.
அறிவிப்பாளர்: *ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா),*
நூல்: *அபூதாவூத் ஹதீஸ் எண் 2161*
🎊 *அர்ஷ் அசைந்தது* 🎊
*عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده سبعون ألفا من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه*
சஃது இப்னு முஆஃத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இறந்ததன் பின்னர் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
*இவருக்காகத்தான் அர்ஷ் ஆடியது. வானத்து வாசல்கள் திறக்கப்பட்டன. மேலும், எழுபதாயிரம் மலக்குகள் இவரது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர்.*
அறிவிப்பாளர்: *இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
நூல்: *நசாயீ எண் 2028, தபரானீ (கபீர்) எண் 3331*
🌹 *எல்லைதாண்டிய பார்வை* 🌹
*عن ابن عمر أن عمر بعث جيشا وأمر عليهم رجلا يدعى سارية فبينما عمر رضي الله عنه يخطب يصيح ياساري الجبل فقدم رسول من الجيش فقال يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا صائح يصيح ياساري الجبل فاسندنا ظهورنا إلى الجبل فهزمهم الله*.
திண்ணமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் யா சாரியா அல் ஜபல் (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்!) என சப்தமிட்டார்கள்.
பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது *யா சாரியா அல்ஜபல்* என்று ஒரு சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கிக் கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.
அறிவிப்பாளர் : *இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
நூல் : *பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா)* ஹதீஸ் எண் 2655.
யுத்தம் நடைபெற்ற இடம் பாரசீகம். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொற்பொழிவு ஆற்றியது மதீனா மாநகரம். பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நிகழ்வை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) பார்த்ததும், இவர்கள் கொடுத்த சத்தத்தை பாரசீகத்திலுள்ள தோழர்கள் செவியேற்றதும் இறைவன் வழங்கிய (கராமத்) அற்புதங்களாகும்.
🌸 *வயிற்றிலுள்ள குழந்தை ஆணா? பெண்ணா?* 🌸
*عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت إن أبا بكر الصديق كان نحلها جاد عشرين وسقا من ماله بالغابة فلما حضرته الوفاة قال والله يابنية مامن الناس احد احب الي غني بعدي منك ولا اعز علي فقرا بعدي منك وإني كنت نحلتك جاد عشرين وسقا فلو كنت جددتيه واحتزتيه كان لك وإنما هواليوم مال وارث وإنما هما اخواك وأختاك فاقتسموه على كتاب الله قالت عائشة فقلت ياأبت والله لوكان كذا وكذا لتركته إنما هي أسماء فمن الأخري فقال ابوبكر ذو بطن بنت خارجة أراها جارية*
மரணத்தருவாயிலிருந்த அபூபக்ர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
ஆயிஷாவே! நான் விட்டுச் செல்கிற வராஃதத் சொத்துகளை நீயும் உனது இரு சகோதரர்களும் மற்றும் இரு சகோதரிகளும் இறைவன் குர்ஆனில் கூறியபடி பங்கு பிரித்துக் கொள்ளுங்கள்!
நான் கேட்டேன், எனதருமைத் தந்தையார் அவர்களே! இரு சகோதரிகள் என்றீர்களே! அஸ்மா என்ற ஒரு சகோதரிதானே எனக்குள்ளார்! இன்னொரு சகோதரி யார்?
(ஆயிஷாவே!) எனது மனைவியார் பின்து காரிஜா கர்ப்பமாக உள்ளார். அவர் பெண் குழந்தையை ஈன்றெடுப்பார். (எனவேதான் உனக்கு இரு சகோதரிகள் என்றேன்).
அவர்கள் கூறியது போன்று பின்து காரிஜா அவர்கள் உம்மு குல்தூம் எனும் பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : *ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள்*,
நூல் : *முஅத்தா எண் 1242, பைஹகீ எண் 12267*
ஒரு பெண்ணின் வயிற்றிலுள்ள கரு ஆணா? அல்லது பெண்ணா? என்பதை நானே அறிவேன் என்று அல்குர்ஆன் 31:34 வசனத்தில் கூறிய இறைவன் தான் நாடிய நல்லடியார்களுக்கு அந்த ஞானத்தை அறிவித்துக் கொடுக்கிறான். மேற்கண்ட ஹதீஸ் இதை பறை சாற்றுகிறது.
🎊 *மரணத்தை அறிந்த மாண்பாளர்கள்*🎊
*عن سلمى قالت اشتكت فاطمة شكواها التي قبضت فيه فكنت امرضها فاصبحت يوما كأمثل مارأيتها في شكواها تلك قالت وخرج علي لبعض حاجته فقالت ياامة اسكبي لي غسلا فسكبت لها غسلا فاغتسلت كأحسن مارأيتها تغتسل ثم قالت ياامة اعطيني ثيابي الجدد فاعطيتها قلبستها ثم قالت ياامه قدمي لي فراشي وسط البيت ففعلت واضطجعت واستقبلت القبلة وجعلت يدها تحت خدها ثم قالت ياامه إني مقبوضة الآن إني مقبوضة الآن وقد تطهرت فلا يكشفني احد فقبضة مكانها قالت فجاء علي فاخبرته*
ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களுக்கு நான் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை என்றைக்குமில்லாத சில செயல்களை செய்தார்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வெளியே சென்றிருந்த நேரம் அது.
ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் என்னிடம் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்களென்றார்கள். தண்ணீர் கொடுத்தேன். அழகிய முறையில் குளித்தார்கள். எனது புதிய ஆடையை கொடுங்களென்றார்கள். கொடுத்தேன். அதை அணிந்து கொண்டார்கள். வீட்டின் நடுப் பகுதியில் எனது படுக்கையை போடுங்கள் எனக் கூறினார்கள். அவ்வாறே செய்தேன். படுக்கையில் கிப்லாவை முன்னோக்கியவண்ணம் ஒருக்களித்து படுத்துக்கொண்டார்கள் தனது கையை கன்னத்திற் கீழாக வைத்துக்கொண்டார்கள். பிறகு கூறினார்கள். செவிலித்தாயார் அவர்களே! இப்பொழுது இவ்வுலகை விட்டும் பிரியப்போகிறேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் இருந்த இடத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்தது. வெளியில் சென்றிருந்த அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வருகை புரிந்தார்கள். நடந்தவை அனைத்தையும் அவர்களிடம் கூறினேன்.
அறிவிப்பாளர் : *சல்மா(ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்*
நூல் : *அஹ்மது ஹதீஸ் எண் 26333*
*عن ابن عمر رضي الله عنهما، أن عثمان أصبح فحدث فقال إني رايت النبي صلى الله عليه وسلم في المنام الليلة فقال ياعثمان افطر عندنا فاصبح عثمان صائما فقتل من يومه رضي الله عنه "هذا حديث صحيح الاسناد، ولم يخرجاه"*
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலை நேரத்தில் ஒரு செய்தியை சொன்னார்கள்.
திண்ணமாக நான் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கடந்த இரவு கனவிலே கண்டேன் அப்போது அவர்கள் கூறினார்கள். உஸ்மானே! நம்மிடம் வந்து நோன்பு திறங்கள்! அன்றைய தினம் நோன்பு வைத்த நிலையில் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் : *இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
நூல் : *ஹாக்கிம் எண் 4530,இப்னு அபீஷைபா எண் 30510*
ஒருவர் எங்கே மரணிப்பார்? எப்போது மரணிப்பார் என்பது இறைவன் ஒருவனே அறிவான். அவ்விறைவன் தான் நாடிய நல்லவர்களுக்கு அவ்வப்போது மரண செய்தியை அறிவித்துக் கொடுப்பான் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் தெளிவாக புரிந்துக் கொள்கிறோம்.
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
நூல் : *இறைவழியில் இறை நேசர்கள்*
ஆசிரியர் : *அல்ஹாஜ் மௌலவி சேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் M.A அவர்கள்*
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻
No comments